பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14C செளந்தர கோகிலம் நடந்துகொள்வது அவசியந்தான். நான் சைவன். ஆகையால் உங்கள் திருப்பாவையைப் படித்ததில்லை. இதுபோலவே தாயுமான சுவாமிகள் பாடலில், "அரும்பொனே மணியே!” என்று ஆரம்பிக்கும் ஒரு பாடல் இருக்கிறது. அதில், 'இரும்புநேர் நெஞ்சகக் கள்வனானாலும் உனை இடைவிட்டு கின்றதுண்டோ? என்று நீ அன்று நான் உன்னடிமை யல்லவா!' என்று தாயுமான சுவாமி பாடியிருக்கிறார். அது எப்படி இருக்கிறது பார்த்தாயா?” என்றார். அவரது மனையாட்டி, 'அதுவும் நன்றாகவும் உருக்கமாக வும் இருக்கிறது. ஆனால், அது தெய்வத்துக்கும் மனிதனுக்கும் உள்ள சம்பந்தத்தை மாத்திரம் குறிக்கிறது. நான் சொன்ன பாசுரம் தெய்வத்திற்கும் மனிதனுக்கும் உள்ள சம்பந்தத்தையும், புருஷனுக்கும் மனைவிக்கும் உள்ள சம்பந்தத்தையும் சிலேடை யாகச் சொல்லுகிறது. எங்களைப்போலிருக்கும் ஸ்திரீகளுக்கு இது அதிகமாய்ப் பயன் தரும். உலகப் பற்றைத் துறந்து பரம் பொருள் ஒன்றையே நாடி நிற்கும் மகான்களுக்கே தாங்கள் சொன்ன பாடல் உபயோகப்படும். அவ்வளவே வித்தியாசம்’ என்றாள். திவான் முதலியார், 'நீ சொல்வது உண்மைதான். அப்படியானால், நீ அந்தத் திருப்பாவைப் பாசுரத்தில் சொல்லப் பட்டிருப்பதைப் போல நடந்துகொண்டு வருகிறாயா?” என்றார். காந்திமதியம்மாள், 'அதுபோல நடக்கவேண்டுமென்ற ஆசை இருக்கிறது, மன உறுதியும் இருக்கிறது. ஆனாலும், என் மனம் திருப்தியடையும்படி இரவு பகல் எப்போதும் தங்களுக்குப் பணிவிடை செய்யும்படியான சந்தர்ப்பமும் பாக்கியமும்தான் கிடைக்கிறதில்லை. மற்ற சகலமான விஷயங் களிலும் நான் மகத்தான சம்பத்தையும், சுகபோகங்களையும் பெற்றிருந்தாலும், அந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் எனக்குக் குறைதான். தாங்கள் இந்த ராஜ்யத்தில் மகாராஜனுடைய பிரதிநிதி ஸ்தானத்தில் இருப்பதுபற்றி, தாங்கள் காலாலிடும் வேலையைத் தலையாற் செய்ய நூற்றுக் கணக்கான சிப்பந்திகள் ஏற்பட்டிருக்கிறார்கள். நியாயமாய் எனக்குக் கிடைக்கவேண்டிய