பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 செளந்தர கோகிலம் என்று சொல்லவேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு இன்னொரு சந்தேகம் உதிக்கிறது. நான் இந்த சமஸ்தானத்தில் திவான் உத்தியோகம் பார்க்கிறேன். வெளிப் பார்வையில் நான் மற்றவரைவிடப் பெரியவன் என்பது தெரியும்படியும், இந்த ஸ்தானத்தின் கெளரதைக்குத் தக்கபடியும் எனக்கு ஏராளமான சிப்பந்திகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தேசத்து அரசரோ என்னைவிடப் பன்மடங்கு அதிகமான மேம்பாடு கெளரதையும் உடையவர். ஏராளமான பரிவாரங்கள் எப்போதும் சூழ்ந்து அவரை நிரம்பவும் உன்னதமான ஸ்தானத்தில் வைத்து, அவர் மனசால் நினைக்குமுன் அவரது குற்றேவல்களைச் செய்து வருகிறார்கள். மகாராஜனை விட்டு, அண்டாண்ட பிரம்மாண்டம் என்னும் சகலமான உலகங்களையும், கடல்களையும், மலை களையும், ஆரணியங்களையும், அவற்றினுள் நிறைந்துள்ள சகலமான ஜீவன்களையும், இன்னும், சூரிய சந்திரர்களையும் கோடானுகோடி நட்சத்திர மண்டலங்களையும், ஆகாய வெளிகளையும் படைத்து, மகா விநோதமாக நிலைநிறுத்தி, நடத்திக்கொண்டே போகும் மகத்திலும் மகத்தானவரும், அணுவிலும் பரம அணுவானவரும், எவராலும் கண்டுபிடிக்க முடியாமல் எல்லா இடத்திலும் நிறைந்த சகலமான வஸ்துக் களையும் தமது இச்சா மாத்திரத்தில் படைத்துக் காத்து அழிப்பவரும், அறிவுமயமானவரும், வல்லமையே வடிவமான வருமாய் எக்காலத்திலும் மனிதரது புத்தியைப் பிரமிக்கச் செய்யும் பரமாத்மா இருக்கிறாரே, அவருடைய விஷயத்தை நாம் நினைத்துப் பார்த்தால், நம்முடைய புத்தி குழம்பிப்போகுமே அன்றி வேறல்ல. கேவலம் அற்ப மனிதனாகிய என்க்கே இத்தனை வைபவமும், இத்தனை ஆள் மாகாணங்களும் இருக்கையில், சர்வ வல்லமையும், சர்வ அதிகாரமும் வாய்ந்த பரம்பொருளின் கோலாகலத்தை நாம் மனசால் பாவிக்க முடியுமா? அவருடைய பணிவிடைகளுக்கு எத்தனை கோடி ஜனங்கள் இருப்பார்கள். அவருடைய மகிமையை எடுத்துப்புகழ எத்தனை கட்டியக்காரர்கள் இருப்பார்கள். அவரது இராஜ சின்னங்கள் எப்படித்தான் இருக்கும் என்றாவது, அவற்றின் எண்ணிக்கையையாவது எவராது கண்டு சொல்லமுடியுமா! எனக்குப் பணிவிடைகள் செய்யும் பாக்கியமும் இன்பமும் உன்