பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 145 பெண்மணி தனது மாமனாரை அப்போது நேரில் காண்பவள் போல மட்டிலடங்கா ஆநந்தம், குதுாகலம், பயபக்தி, விசுவாசம், நாணம், ஒடுக்கம் முதலிய உணர்ச்சிகளையடைந்து, கடிதத்தில் எழுதப்பட்டுள்ள விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் கொண்டாள். ஆனாலும், அதை வெளியில் காட்டாமல் அடக்கிக்கொண்டு அசைவற்றுக் கற்சிலை போல ஒய்ந்து நின்றுவிட்டாள். கடிதத்தைப் பிரித்த திவான் அதன் ஆரம்பத்தையும் முடிவையும் இரண்டொருமுறை திருப்பிப் பார்த்துவிட்டு, “சரி; அப்பாதான் எழுதி இருக்கிறார்கள். படிக்கிறேன் கேள்” என்று கூறியவண்ணம் கடிதத்தைப் படிக்கலானார். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது : திருவடமருதூர் சிரஞ்சீவி செல்வக் குமாரனுக்கே அநேக ஆசீர்வாதம், உபய rேமம். கடைசியாக நீ அனுப்பிவைத்த கடிதமும் பணமும் வந்து சேர்ந்தன. நீ எழுதியபடி பணத்தை உடனே பங்கீடு செய்து விட்டேன். நீ பணம் அனுப்ப அனுப்ப, இவ்விடத்தில் என்னுடைய பொறுப்பும் கவலைகளும் மலைபோலப் பெருகிக்கொண்டே போகின்றன. நான் என்னுடைய சம்பாத்திய காலத்தில் ஒரு சிறிய ஜவுளிக்கடைதான் வைத்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு நம்மடைய குடும்ப காலrே:பத்தை நடத்தி, உன்னையும் படிக்க வைத்தேன், அந்தக் காலத்தில் எனக்கிருந்த சந்தோஷத்திலும் மனோதிடத்திலும் ஆயிரத்தில் ஒரு பங்குகூட இப்போது இல்லை. அப்போது நான் உன்னைப் படிக்கவைத்ததைக்கண்டு இந்த ஊரில் இருந்தவர்கள் எல்லோரும், துணிக்கடைக்காரன் மகன் எம்.ஏ. படித்து எருமை மேய்க்கப் போகிறானோ! இந்த ரூபாயை வட்டிக்குப் போட்டாலும் மாசம் பத்து ரூபாய் லாபம் கிடைக்குமே!’ என்று நிரம்பவும் ஏளனமாகப் பேசி புரளி செய்தார்கள். இப்போது செ.கோ.:1-10