பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 செளந்தர கோகிலம் உனக்குப் பெரிய திவான் உத்தியோகம் கிடைத்திருப்பதைப் பற்றியும், நீ மாசம் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறதைப் பற்றியும் அதே மனிதர்கள் இப்போது என்னிடம் வந்து வாய் ஓயாமல் முகஸ்துதியாகப் பேசி, நம்மைச் செல்வத்தில் குபேரனென்றும், புத்தியில் பிரகஸ்பதி என்றும் கொண்டாடு கிறார்கள். இப்போது மளமளவென்று பெருகிக்கொண்டே போகும் நம்முடைய செல்வத்தைக் காணக் காண, எல்லோரும் உள்ளுறச் சகிக்க முடியாத பொறாமையும் வயிற்றெரிச்சலும் கொண்டு, 'இவர்களுக்கு இப்படிப்பட்ட வாழ்வு வருமா" என்று தமக்குத் தாமே புழுங்கிப் போகிறார்கள். ஆனாலும், வெளிக்கு என்னை ஸ்துத்தியம் செய்கிறார்கள். அவர்கள் அப்படி ஸ்துத்தியம் செய்துகொண்டே என்னிடம் வருவதெல்லாம் எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபமென்ற எண்ணத்தோடன்றி வேறல்ல. அவர்களுடைய பொறாமையையும் துராசையையும் நான் தெரிந்துகொண்டும் ஒன்றையும் அறியாதவன்போல நிரம்பவும் சாமர்த்தியமாய் நடந்து வருகிறேன். ஊரில் உள்ளவர்கள் என்னை எவ்வளவு தான் அபாரமாய்ப் புகழ்ந்து பாராட்டினாலும், நீ தலையெடுத்தபிறகு நம்மிடம் உண்மையில் ஏராளமான செல்வம் இருப்பது உண்மையானாலும், எனக்குப் பழைய நிம்மதியும், சந்துவிடியும் இல்லவே இல்லை. என் விசனமும் விரக்தியும் தினம் தினம் பெருகிக்கொண்டே போகின்றன. உன் தாயார் இறந்துபோய் கிட்டத்தட்ட ஐந்து வருஷ காலமாகிறது. என்றைக்கு அவளைப் பறி கொடுத்தேனோ அன்று முதலே எனக்கு இந்த ஜென்மம் வியர்த்தமாய்விட்டது. நீ இங்கே பக்கத்தில் எவ்விடத்திலாவது ஒர் உத்தியோகம் பார்ப்பாய் என்றும், உன்னையும், உன் சம்சாரம் குழந்தைகளையும் அடிக்கடி பார்த்தும், உங்களோடு இருந்து காலந்தள்ளுவதும் ஒருவித ஆறுதலாக இருக்குமென்று நான் நினைத்த நினைப்பும் கைகூடவில்லை. இவ்விடத்திற்குச் சுமார் ஐந்நூறு மைல் தூரத்திலுள்ள திருவனந்தபுரத்தில் நீங்கள் இருக்கவும், நான் என்னுடைய அறுபத்தைந்தாவது வயசு காலத்தில் தனியாக இந்த ஊரிலிருந்து ஏங்கித் தவிக்கவும் ஈசன் எழுதிவிட்டான். இவ்விடத்திலுள்ள நம்முடைய பங்களாவை யாருக்காவது