பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பககார் 147 வாடகைக்குக் கொடுத்துவிட்டு, உங்களிடம் வந்து சேர்ந்து விடும்படி நீ பல தடவைகளில் எழுதி இருக்கிறாய். இப்போதும் நீ அதையேதான் சொல்லுவாய். ஆனாலும் என் மனம் அந்த விஷயத்தில் ஒரே விதமான தீர்மானத்தைக் கொண்டிருக்கிறது; நம்முடைய முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாக இந்த rேத்திரத்தில் இருந்து ஈசனுடைய திருவடி நீழலை அடைந்து இருக்கிறார்கள். ஆகையால், நானும் என் கடைசிகாலத்தை இந்த rேத்திரத்திலேயே கடத்திவிட வேண்டுமென்று ஒரே உறுதியாக இருக்கிறேன் என்பதை நான் பல தடவைகளில் உனக்கு எழுதியும் நேரில் சொல்லியும் இருக்கிறேன். அதையே தான் நான் எப்போதும் சொல்லுவேன். எனக்குத் தள்ளாமை வர வர அதிகரித்துக்கொண்டே போகிறது. அந்த நிலைமையில், நான் ஒரு கடின நேரமாவது இந்த க்ஷேத்திரத்தைவிட்டு வேறு எந்த ஊருக்கும் போக விரும்பவில்லை. எந்த நிமிஷத்தில் கடவுள் எனக்கு ஆள் அனுப்புவாரோ அந்த நிமிஷத்தில் புறப்பட நான் ஆயத்தமா யிருக்கவேண்டுமல்லவா? உன்னையும் உன் மனையாளையும் குழந்தை ராஜா பகதூரையும் பார்க்கவேண்டும் என்று என் மனம் துடிக்கிறது; என் கண்கள் பறக்கின்றன. இரவு பகல் எனக்கு உங்கள் நினைவே நினைவாக இருக்கிறது. எங்கே பார்த்தாலும் நீங்கள் மூவரும் நின்றுகொண்டிருப்பது போலவே என் மனம் உணர்கிறது; அப்படி இருந்தும், இந்த rேத்திரத்தை விட்டு வெளியேற என் மனம் ஒருப்பட மாட்டேன் என்கிறது. என்னுடைய துயரத்திற்கும், ஏக்கத்திற்கும் முக்கியமாக உங்களுடைய பிரிவாற்றாமையே காரணமென்பதை அறியாத இந்த ஊர் ஜனங்கள் என்னைப் பார்த்து மனம் போனபடி எல்லாம் பேசுகிறார்கள். சிலர் சொல்லுகிறார்கள், 'ஏன், தாத்தா, நீங்கள் மாத்திரம் தனியாக இந்த ஊரில் இருந்து என்ன செய்கிறீர்கள்? பிள்ளைதான் ராஜபோகத்தில் இருக்கிறாரே. அங்கேபோய் செளக்கியமாய் இருக்கக்கூடாதா என்கிறார்கள். சிலர், 'எவ்வளவுதான் பிள்ளை பெரிய பதவியிலிருந்தாலும், பரம்பரையாக இருந்த ஊரையும், இவ்வளவு அழகாக இருக்கும் பங்களாவையும் விட்டு தூர தேசத்துக்குப் போவது சரியல்ல; இங்கேயே இருந்துவிடுங்கள். உங்களுக்கென்ன வயசு அவ்வளவு