பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 149 இந்த ஊருக்கு அவரே தலைவர் என்பதும் உனக்குத் தெரிந்த விஷயம். ஊர் நியாயங்களையெல்லாம் அவரே தீர்த்து வைக்கிறார். அவர் மகா புத்திமான், யோக்கியர். அவருக்கு இருபது வயசில் ஒர் ஆண்பிள்ளையும், பதினேழு வயசில் ஒரு பெண்ணும் இருக்கிறார்கள். பையனுக்குக் கலியாணம் ஆய்விட்டது. பெண்ணுக்கு இன்னம் கலியாணம் நடக்கவில்லை. எத்தனையோ இடங்களிலிருந்து பெண்ணுக்கு வரன் வந்து கொண்டே இருந்தது. அவருக்கும் அவருடைய சம்சாரத்துக்கும் எந்த வரனும் திருப்திகரமாகத் தோன்றவில்லை; எதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை. தங்களுக்கு வாய்க்கும் மாப்பிள்ளைக்கு ஆயிரம் வேலி நிலம் இருக்க வேண்டும், பையன் பி.ஏ. அல்லது, எம்.ஏ. பரிட்சையில் தேறி இருக்க வேண்டும், அவன் சிவப்பாகவும், மன்மதன் போன்ற அழகுடையவனாகவும் இருக்கவேண்டும், அவனுக்கு இருபது வயதிற்குமேல் அதிகம் ஆயிருக்கக்கூடாது. அவன் கலியாணம் ஆன அடுத்த கூடிணம் முதல் மாமனார், மாமியார், பெண்ஜாதி முதலியோருக்கு அடிமையாய் நடக்கக் கூடியவனாக இருக்க வேண்டும் என்று இப்படியெல்லாம் அவர்கள் சொல்லிச் சொல்லி எல்லா வரனுக்கும் குற்றம் கூறி அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் இப்போது தங்களுடைய பெண்ணை எனக்குக் கட்டிக் கொடுப்பதாய் சொல்வதாயும், பெண்கூட அதற்கு இணங்கி விட்டதென்றும் எனக்கு நம்பிக்கையான செய்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. மனிதருக்கு உன்னதமான பதவியும், ஏராளமான பணமும் வந்து விடுமானால், அவர்கள் சொப்பனத்திலும் எதிர்பார்க்க முடியாத பெருமைகளெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாய் மளமளவென்று அவர்களுக்கு வந்து லபிக்கின்றன. இதே அண்ணாசாமி முதலியாரும், அவருடைய சம்சாரமும் இப்போது எப்படிப் பேசிக் கொள்கிறார்களாம் தெரியுமா? இங்கிலீஷ் படிப்பு யாருக்கு வேண்டும்? ஜீவனத்துக்கு வேறே வழி இல்லாமல் திண்டாடுகிறவர்களல்லவா இங்கிலீஷ் படிப்பையும், அதன் மூலமாய் உத்தியோகத்தையும் நாடுகிறார்கள். இந்த இங்கிலீஷ் படிப்பு இந்தத் தேசத்துக்கு வந்த ஆரம்பத்தில் பி.ஏ. என்றால், மதிப்பு அதிகம். இப்போது பி.ஏ. படித்தவர்களும், எம்.ஏ.