பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 13 சயனத்திற் படுத்துக்கொண்டார்கள் என்பதை நிச்சயித்துக் கொண்டவளாய், அந்த யெளவன ஸ்திரீ மெதுவாகத் தனது சயனத்திலிருந்து எழுந்து, சந்தடி செய்யாமல் விரல்களை ஊன்றி நடந்து அவ்விடத்தை விட்டு வெளியில் சென்றாள். சென்றவள், தான் அவ்வாறு போவதை யாராவது பார்த்துவிடப் போகிறார் களே என்ற அச்சம் கொண்டவள்போல அங்கும் இங்கும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு, பக்கத்தில் இருந்த சில விடுதிகளைக் கடந்து, சிறிது துரத்திற்கு அப்பால் இருந்த அலங் காரமான ஒரு சயன மாளிகையை அடைந்து, அதன் கதவை மெதுவாகத் தட்ட சிறிது நேரத்தில் அந்தக்கதவு திறக்கப்பட்டது. உட்புறத்தில் விளக்கு ஜாஜ்வல்லியமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. சகலமான இன்பங்களும் அழகும் நிறைந்து ரதி தேவியின் சயனமாளிகைபோல இருந்த அந்த விடுதிக்குள் இருந்த கதவை திறந்துவிட்ட நமது செளந்தரவல்லியம்மாள் புஷ்பாவதி வந்திருந்ததைக் கண்டு மகிழ்ச்சியாகப் புன்னகை செய்து, 'வாருங்கள்; வாருங்கள் என்று கூறி, அவளை உபசரித்து உள்ளே அழைத்துக்கொண்டு போய் ஒரு ஸோபாவின் மீது உட்காரவைத்துத் தானும், பக்கத்தில் இருந்த ஒரு நாற்காலியின் மீது உட்கார்ந்து கொண்டாள். நிச்சயதார்த்த தினத்திற்கு முதல் நாள் மாலையில், கோகிலாம்பாளும், கண்ணபிரானும் ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்து கொண்டிருந்த காலத்தில் பின் புறத்தில் ஒளிந்திருந்த செளந்தரவல்லியம்மாள் திடீரெனத் தோன்றித் தனது அக்காளை நிரம்பவும் இழிவாகத் துாவித்ததும், கண்ண பிரான் அவளைச் சாந்தப்படுத்தும் பொருட்டு சொன்ன சமாதா னங்களைக் கேட்டும், அவள் கோபமாகவும் முறுக்காகவும் பங்களாவை நோக்கிச் சென்றதும் தெரிந்த விஷயங்கள். அவ்வாறு வந்தவள் நேராகத் தனது தாய் இருந்த இடத்திற்குப் போய் மிகுந்த ஆத்திரத்தோடு பேசத் தொடங்கி கோகிலாம் பாளும் கண்ணபிரானும் பூங்காவிலிருந்த நிலைமையைத் தெரிவித்து, அக்காள் எப்படிப்பட்ட குற்றம் செய்தாலும் தனது தாய் கண்டிப்பதே இல்லை என்றும், தான் எவ்விதத் தவறு செய் யாதிருந்தாலும், தன்னை அநாவசியமாகக் கண்டிக்கிறாள் என்றும் கூறி நிஷ்டுரமாகப் பேச, அதைக்கேட்ட பூஞ்சோலை