பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 செளந்தர கோகிலம் மெளனமாக நின்றாள். கடிதம் முடிவடைவதற்குள் அவளது மனம் இன்னதென்று விவரிக்க இயலாத பலவித உணர்ச்சிகளால் உலப்பப்பட்டு வருந்தத் தொடங்கியது. தனது மாமனாரது பரிதாபகரமான நிலைமையைக் கேட்கக் கேட்க, தாங்க வொண்ணாத பெருத்த மனவேதனையும் இரக்கமும் தோன்றி வதைத்தன. அதோடு தான் தனது பிராணநாயகரை விட்டுப் பிரிந்துபோக நேரிடுமே என்ற ஏக்கமும் சஞ்சலமும் அபாரமாகப் பெருகி வளைத்துக்கொண்டன. ஆகவே அவளது முகத்தின் வாட்டமும் சோர்வும் சுலபத்தில் காட்டின. அந்தப் பெண்ணரசியின் மனநிலைமையை உள்ளபடி வெகு நுட்பமாக யூகித்தறிந்துகொண்ட திவான் அவளது விசனத்தை மாற்றி அவளை உற்சாகப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தோடு அவளைநோக்கி இனிமையாகப் புன்னகைசெய்து நயமாகவும் குழந்தைபோலவும் கொஞ்சலாகப் பேசத்தொடங்கி, 'பத்துப் பதினைந்து தினங்களுக்கு உனக்கும், உன் குழந்தைகளுக்கும் நல்ல வேட்டைதான். முன் காலங்களில் பெண்கள் தாய் வீட்டுக்குப் போவதென்றால் சந்தோஷப் படுவார்கள் புருஷர் வீட்டுக்குப் போவதென்றால், விசனப்படுவார்கள். ஏனென்றால், தாய் வீட்டில் வேலை செய்யாமல் சந்தோஷமாயிருக்கலாம். புருஷன் வீட்டில் உழைத்து வேலை செய்யவேண்டும்; மாமனார் மாமியாருக்குப் பயந்து அடங்கி ஒடுங்கி மூலை முடக்குகளில் போய் ஒளிந்துகொண்டிருக்க வேண்டும். இப்போது உன்னைப் போன்றவர்கள் மாமனார் வீட்டிற்குப் போனால், உனக்கு ராஜோபசாரம் நடக்கும், உன்னை அவர்கள் தரையில் நடக்கவிடமாட்டார்கள். தினந்தினம் விருந்து, தினந்தினம் திருவிழா, தினந்தினம் சுவாமி தரிசனம், இரவு பகல் மேளவாத்தியத்தின் சங்கீதம். உன் பாடு கொண்டாட்டம் தான்” எனறாா. தனது புருஷர் தனது ஏக்கத்தை விலக்கவும் தன்னை சந்தோஷப்படுத்தவும் அவ்வாறு பேசுகிறார் என்பதை உணர்ந்துகொண்ட பெண்மணி தான் தனது மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவரது மனப்போக்கின்படி நடந்து கொள்ள வேண்டுமென்று எண்ணிக் கொண்டவளாய் நிரம்பவும் பணிவாகப் பேசத்தொடங்கி, "சரி, தாங்கள் தந்தை சொன்மிக்க