பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 157 மந்திரமில்லை யென்று நினைக்கும் சற்புத்திரர். ஆகையால், தாங்கள் எப்படியும் பிதிர்வாக்கிய பரிபாலனம் செய்தே தீருவீர்கள். அதுபோலவே, நானும் தங்களுடைய சித்தமே சட்டமாக மதித்து நடக்கக் கடமைப்பட்ட தங்கள் அடிமை. தாங்கள் என்னைப் பார்த்து, "நீ போய், உடனே கிணற்றில் விழ வேண்டியது” என்று சொல்லும் பட்சத்தில், அதை நான் அந்த உத்தர rணத்திலேயே ஆநந்தமாக நிறைவேற்ற வேண்டியவள். ஆகையால், தாங்கள் பார்த்து என்னை ஊருக்கு அனுப்பி வைத்தால், நான் அதை சிரசாக வகித்து சந்தோஷமாய்ச் செய்கிறேன். நான் தங்களுடைய பிரியத்தை நிறைவேற்றுகிறேன் என்ற எண்ணத்தினால் மாத்திரம் நான் சந்தோஷமடைவேனே தவிர, அவ்விடத்தில் திருவிழாவில் காணப்படும் வேடிக்கை களைக் கண்டு நான் சந்தோஷமடைகிறவளன்று. தாங்கள் என்னோடு கூட இருந்து எதைக் குறித்தாவது சந்தோஷம் அடைந்தால், அப்போது நானும் தங்களோடுகூட இருந்து அந்த சந்தோஷத்தைப் பங்கிட்டுக் கொள்ளுவேன். தாங்கள் இல்லாத காலத்தில் என் மனம் ஒரு நாளும் எதைப்பற்றியும் சந்தோஷம் அடைந்ததே இல்லையென்று நான் நிச்சயமாய்ச் சொல்லுவேன். அநேகமாய் அந்தக் காலத்திலெல்லாம் பெருத்த ஏக்கந்தான் என் மனசில் குடிகொண்டிருந்திருக்கிறது” என்றாள். அதைக் கேட்ட திவான் முதலியார் தமது மனையாட்டியின் அந்தரங்கமான உறுதிமொழியை உணர்ந்து அவளது கற்பு விசே ஷத்தை நினைத்து மிகுந்த மன இளக்கமும் குது.ாகலமும் அடைந் தார். அதற்கு அறிகுறியாக் அவரது முகம் சந்தோஷத்தினால் மலர்ந்தது. கண்களில் ஆநந்த பாஷ்பம் சரேலென்று தோன்றி வெளிப்பட்டது. - - அவர் அளவற்ற வாத்சல்யம் தோன்ற நெகிழ்வான குரலில், 'ஏது இன்றையதினம் நீ யோசனையில்லாமல் அவசரப்பட்டு பேசுகிறாயே, நீ எப்போது பேசினாலும், ஆட்சேபணைக்கு இடம் கொடாமல் ஆணித் தரமாகவும் அழகாகவும் பேசுவாய். இப்போது நீ சொன்ன விஷயம் ஒப்புக் கொள்ளக்கூடியதாக இல்லையே' என்றார். அதைக் கேட்ட ஸ்திரீரத்னம் நடுங்கிப் போய்த் தான் ஏதேனும் தவறான சொற்களை உபயோகித்திருக்கலாமோ