பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 159 சந்தோஷத்தை வெளியிடும் பட்சத்தில் அவர்களே அவனைக் கெடுத்தவர்களாவார்கள் தாய்மார் குழந்தைகளைப் புகழ்வதும், தமது சந்தோஷத்தை அவர்களிடம் வெளிப்படுத்துவதும் அவர்களைக் கெடுத்துவிடக்கூடிய காரியங்களல்லவா? அவர்களுடைய குணவிசேஷங்களைக் கண்டு தாய்மார் உள்ளுற சந்தோஷமடைந்தாலும், அதை அவர்களுக்குத் தெரியும்படி காட்டிக்கொள்ளாமல் இருந்தால்தான், குழந்தைகள் பயந்து திருந்தி நல்வழிப்பட்டு முன்னுக்கு வருவார்கள். நம்முடைய பையனுக்கு மூன்றரை வயசு நிறைகிற வரையில்தான் அவனுடைய காரியங்களும், அவனைக் காண்பதுவும் எனக்கு சந்தோஷத்தை உண்டுபண்ணின. அதன் பிறகு நான் அவனை நிரம்பவும் ஜாக்கிரதையாகப் பழக்கி வருகிறேன். அவனுடைய சிசுப்பருவத்தில் தாங்களும் அநேகமாய் சதாகாலமும் என்னோடு கூடவே இருந்தீர்கள். நாமிருவரும் சேர்ந்தே அவனுடைய விளையாட்டுகளைக் கண்டும், அவனுடைய சொற்களைக் கேட்டும் சந்தோஷப்பட்டோம். அவனுடைய சிசுப்பருவம் தாண்டிய பிறகு நான் அவனுடன் தனியாக இருந்து சந்தோஷமடைந்ததே இல்லை; இனியும் அப்படிப்பட்ட தவறை நான் செய்யமாட்டேன்' என்றாள். திவான் திகைப்படைந்து, "நீ சொல்லுகிறது புது விஷயமாக இருக்கிறதே! பெண் பிள்ளைகளின் மனப்போக்கு உன்னைப் போன்றவர்களுக்குத்தான் நன்றாகத் தெரியவேண்டும். நான் ஆண்பிள்ளைகளின் மனப்போக்கைப் பற்றி நிச்சயமாகப் பேசக்கூடும். நம்முடைய ராஜாபகதூர் எனக்கு எப்போதும் குழந்தையாகத்தான் தென்படுகிறான். அவன் கிழவனாய், நான் அவனுக்குமேல் பெரிய தாத்தாவாய் இருந்தால்கூட, அப்போதும் நான் அவனைக் குழந்தை என்றுதான் மதிப்பேன். அப்படியே தான் கூப்பிடுவேன். அவனைக் காணும்போதெல்லாம் சூரியனைக் கண்டு தாமரை மலருவது போல, என் மனமும் முகமும் தாமாகவே சந்தோஷத்தினால் மலர்ந்து போகின்றன. அதை நீ எப்போதும் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறாய்” என்றார். காந்திமதியம்மாள், 'நம்முடைய பையன் எள்ளளவும் தவறாக நடப்பவனே அல்ல. ஆகையால், அவன் கெடாமலிருப் பதற்கு நான் ஒருத்தி கண்டிப்பாய் இருப்பதே போதுமானது.