பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 செளந்தர கோகிலம் ஆகையால், தாங்கள் அவனைக்கண்டு எவ்வளவு வேண்டுமானா லும் ஆநந்தமடையலாம். தாங்களும் அவனிடம் கண்டிப்பாய் நடந்துகொள்ளவேண்டிய அவசியமே இல்லை என்பதைத் தெரிந்துகொண்டுதான் தாங்கள் அப்படி நடந்து கொள்ளு கிறீர்கள். தங்களுக்குத் தெரியாத விஷயமும் இருக்கிறதா பையன் கெட்டவனாயிருந்தால் தாங்கள் அப்போது நடந்து கொள்ளுவது வேறுமாதிரியாக இருக்கும்" என்றாள். அதைக் கேட்ட திவான் முதலியார் மிகுந்த சந்தோஷமும் வியப்பும் அடைந்து ஆநந்தமாக நகைத்து, "அப்படியா பையன் விஷயத்தில் நீ அவ்வளவு கண்டிப்பாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்கிறயா! உலகத்தில் தகப்பனார் தான் பிள்ளையிடம் கண்டிப்பாக இருப்பது வழக்கம்; தாய்மார் செல்லம் கொடுத்துக் கெடுப்பார்கள். குழந்தை தாயிடம்தான் சலுகை சொல்லிக் கொள்ளும். எதற்கும் தாய்தான் குழந்தைக்காகப் பரிந்து பேசுவாள். நம்முடைய குடும்பத்தில் சங்கதி அதற்கு மாறாக இருக்கிறது. இப்படி இருப்பதனால், சந்தோஷமெல்லாம் எனக்குத்தான் கிடைக்கிறது' என்றார். காந்திமதியம்மாள், 'நாங்களெல்லோரும் தங்களைச் சந்தோஷப் படுத்துவதற்காகத்தானே பிறந்திருக்கிறோம். எங்களால் தாங்கள் சந்தோஷமடையாவிட்டால், சம்சாரம் எதற்கு, பிள்ளை எதற்கு?’ என்றாள். திவான் முதலியார் தமது மனைவியாளைப் பார்த்து, "அது போகட்டும்; நம்முடைய குழந்தையைக் கண்டு நீ சந்தோஷப் படுவதில்லையென்றே வைத்துக்கொள்ளுகிறேன். இதற்கென்று நீ ஒரு பெரிய திருவிழாவிற்குப் போகிறாயே; அவ்விடத்தில் சுவாமியின் புறப்பாடும், சுவாமி சேவையும் அமோகமாகவும் நேத்திராநந்தமாகவும் இருக்குமே. சுவாமி தரிசனம் பண்ணு வதைவிட வேறு பிரம்மாநந்தமும் உலகத்தில் இருக்குமா? அப்போது கூடவா உன் மனசில் ஆநந்தம் உண்டாகாது?” எனறாா. அதைக் கேட்ட மனையாட்டி, "நான்தான் நாஸ்திக மதத்தைச் சேர்ந்தவளாயிற்றே. உலகத்தில் தெய்வம் ஒன்று இருக்கிறதென்றும், அதை வணங்கி வழிபடவேண்டுமென்றும்