பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 செளந்தர கோகிலம் தினம் கைகூப்பித் தங்களைத் தொழுது அதனால் மகிழ்ச்சி அடைவதற்கு நான் கால்களைப் பெற்றது ஒவ்வொரு தினமும் காலை நண்பகல் மாலை ஆகிய மூன்று காலங்களிலும் தங்களைச் சுற்றி பிரதகவிணம் செய்வதற்கும், தாங்கள் அடியாளை நினைக்கும்போதெல்லாம் ஓடிவருவதற்கும், அப்படிச்செய்து சந்தோஷமடைவதற்குமேயன்றி வேறல்ல. சுருங்கச் சொல்லும் இடத்து நான் இந்த உடம்பைப் பெற்றது எத்தனை விதங்களில் இதைத் தங்களுக்குப் பயன்படுத்தலாமோ அத்தனை விதங்களில் பயன்படுத்தி, அதைப் பேரின்பமாக மதிப்பதற்கு. நான் ஹிருதயத் தையும், மனசையும் பெற்றது என் ஹிருதய மாகிய திருக் கோவிலில் சதாகாலமும் தங்களை வைத்து, மனசாகிய நந்தவனத்தில் புஷ்பிக்கும் நல்ல எண்ணங்கள், வாஞ்சை, பிரேமை, பயம், பக்தி முதலிய உணர்ச்சிகள் ஆகிய மலர்களால் அந்த ஒப்புயர்வற்ற தெய்வத்தைச் சதாகாலமும் அர்ச்சித்து, அதனால் பெருகும் இன்ப ஊற்றையே ஜீவாதாரமாய் எப்போதும் உண்டு, யாவ்ரும் கண்டறியாத பேராநந்தத்தை அடைந்திருப்பதற்கே அன்றி வேறல்ல. தாங்கள் இருக்கும் இடமே எனக்குப் புண்ணிய rேத்திரம். தங்களுடைய தரிசனமே சுவாமி தரிசனம். தங்களால் அடையும் இன்பமே தெய்வப் பிரசாதம். இந்த இன்பத்திற்கு நிகரான இன்பம் நான் வேறே எவ்விடத்திலும் கண்டதும் இல்லை, இனி காணப் போகிறதும் இல்லை. நான் திருவடமருதூருக்குப் போனாலும் சரி, நேராக சொர்க்கலோகத்துக்கே போய் நம்மைப் படைத்த கடவுளுக்கு எதிரில் நின்றாலும் சரி, அங்கே என் மனம் இவ்விதமான ஆநந்தத்தை அடையுமா என்பது சந்தேகந்தான்' என்றாள். தமது மனையாட்டியின் அற்புதமான மனப்போக்கைக் கண்ட திவான் பேருவகைக்கொண்டு பூரிப்படைந்தவராய் அந்த மாது சிரோன்மணியை நோக்கி ஆநந்தமாக நகைத்து, “ஏதேது! நீ பேசுவது மகா விபரீதமாக இருக்கிறதே! நீ நினைப்பது போலவே இன்னும் மற்ற எல்லாப் பெண்பிள்ளைக்கும் நினைத்து சுவாமி தரிசனத்திற்குப் போகாமலேயே இருந்து சத்தியாக்கிரகம் செய்யத் தொடங்கி விட்டால், கடவுளின் பாடு திண்டாட்டம்தான். வேல்ஸ் இளவரசர் வந்த காலத்தில் மகாத்மா காந்தியின் ஆக்ஞைப்படி ஜனங்களெல்லோரும்