பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ió4 செளந்தர கோகிலம் எல்லா ஜீவன்களையும் தன் ஜீவன் போலவே மதித்து இரங்க வேண்டும். அவன் தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ வேண்டும். அவன் தன் மனைவி மக்களைக் காப்பாற்ற வேண்டும். இப்படியெல்லாம் சொல்லப்பட்டிருக்கும் புருஷ தர்மங்களைத் தவறாமல் ஒருவன் செய்துகொண்டே போவானாகில், அவனும் கோவிலுக்குப் போகவேண்டிய அவசியமும் இல்லை; தெய்வத்தைத் தொழவேண்டிய அவசியமும் இல்லை” என்றார். - அவரது மனையாட்டி சந்தோஷத்தோடு நகைத்து, "அதுதான் பூர்த்தியான சத்தியாக்கிரகம், அப்போதுதான் கடவுள் ஏகாங்கியாய் உட்கார்ந்துகொண்டு எவரும் தம்மை நாடவில்லையே என்று நினைத்து விசனப்படுவார் என்றாள். திவான் முதலியார், 'உடனே நம்மெல்லோருக்கும் நம்முடைய சுயராஜ்யமாகிய மோrலோகம் சித்திப்பது நிச்சயம். கடவுள் ஏகாங்கியாய் உட்கார்ந்து ஏன் விசனப்படுகிறார்? அவரே நேரில் வந்து சந்தோஷமாக உலகத்தார் எல்லோரையும் மோr லோகத்திற்கு அழைத்துப் போய்த் தமக்குச் சமதையாக வைத்துக்கொள்வார் என்றார். அதைக் கேட்ட மனையாள் சந்தோஷமாகப் புன்னகை செய்து, "ஆம், வாஸ்தவந்தான். கடவுள் எல்லோருடைய கண்ணுக்கும் தெரியும்படி இராமல் அரூபியாய் மறைந்திருந்து மதசண்டைகளும் ஏராளமான அக்கிரமங்களும் உலகத்தில் நடக்கும்படி விட்டிருக்கிறார். மனிதர் எல்லோரும் ஒரே கட்டுப்பாடாயிருந்து அவருடைய விஷயத்தில் பூர்த்தியான சத்தியாகிரகத்தை நடத்தித் தம் தம் தர்மங்களை ஒழுங்காக நிறைவேற்றிக் கடவுள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிப்பது முதன்மையான கடமைதானே' என்றாள். திவான் முதலியார் சந்தோஷத்தோடு தமது நாயகியை நோக்கி, "இந்த உலகத்திலுள்ள சகலமான ஜீவர்களும் கட்டுப் பாடாயிருந்து மோrலோகத்திற்கு வந்துவிட்டால், இத்தனை பேரும் இருப்பதற்கு அங்கே இடம் இராதென்ற எண்ணமோ என்னவோ, அண்டாண்ட பிரம்மாண்டங்களை எல்லாம் சிருஷ்டிக்கும் அபார வல்லமையுடைய கடவுள் எல்லா