பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 155 pவர்களும் இருக்கும்படியான பெரிய ஒரு மோrலோகம் உற்பத்தி செய்ய அவருக்கும் இன்னமும் சந்தர்ப்பம் வாய்க்க வில்லை என்றே நினைக்கிறேன்' என்றார். காந்திமதியம்மாள், "அவருக்கு அப்படிப்பட்ட எண்ணம் இருந்தால் அவர் இந்த பூலோகத்தையும் மற்றுமுள்ள அண்டாண்ட பிரம்மாண்டங்களையும் ஏன் சிருஷ்டிக்கிறார்? பழைய கட்டிடங்களை இடித்துப் புதிதாய் மெத்தை வீடு கட்டுவதுபோல, இந்த சிருஷ்டியையெல்லாம் அழித்துவிட்டு எங்கே பார்த்தாலும் ஒரே மோrலோகமாய்க் கட்டி விடமாட்டாரா? எல்லோரும் மோr லோகத்துக்கு வரவேண்டும் என்ற எண்ணம் கடவுளுக்கே இல்லை போலிருக்கிறது. ஊர்களுக்கு வெளியிலுள்ள சேரிகளில் சிலர் எப்போதும் வசிப்பது போல, சுவர்க்கத்திற்குப் புறம்பான இந்தப் பூலோகம் முதலிய இடங்களில் எப்போதும் சிலர் இருக்க வேண்டும் என்பதே அவருடைய கருத்து போலிருக்கிறது” என்றாள். திவான் முதலியார், "அதைத் தெரிந்துகொண்டுதான் திருவள்ளுவர் முதலில் ஸ்திரீகள் மாத்திரம் சத்தியாக்கிரகம் செய்யும்படி சொன்னார் போலிருக்கிறது. ஏனென்றால், ஸ்திரீகள் எல்லோரும் பதிவிரதா தர்மத்தைக் கடைபிடித்து மோr லோகத்திற்குப் போய்விட்டால், பூலோகமே புருஷர் மயமாகி விடும். ஆகையால், அப்போதாவது அவர்கள் போய் தம் தம் ஸ்திரீகளை அடையவேண்டுமென்று நினைத்து தம்முடைய தர்மத்தைக் கடைபிடித்து நடப்பார்கள் என்பது அவருடைய கருத்தென்று நினைக்கிறேன். அது போகட்டும். அப்பா எழுதி இருப்பதைப் படிக்க என் மனசு இன்னதென்று சொல்ல முடியாத ஒருவித சஞ்சலம் அடைகிறது. இந்தச் சமயத்தில் இப்படி வேதாந்தம் பேசிக்கொண்டிருப்பது சரியல்ல. தள்ளாத காலத்தில் அவர்கள் ஏகாங்கியாக இருந்து அவஸ்தைப்படும் போது, நாம் இங்கே அபாரமான போக போக்கியங்களில் ஆழ்ந்து கிடப்பதை நினைக்க, நினைக்க, நாம் இதுவரையில் தேடிய பொருள் போதுமென்று நினைத்து இந்த உத்தியோகத்தை உதறி எறிந்து விட்டு ஊருக்குப்போய் விடலாமா என்ற எண்ணம் அடிக்கடி உண்டாகிறது. நான் அம்