பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 செளந்தர கோகிலம் மாதிரி செய்வதாக அவர்களுக்கு எழுதினால், செய்யவேண்டாம் என்று அவர்கள் கண்டித்து எழுதிவிடுவார்கள். இந்த ஊர் அரசரும் என்னை விடமாட்டார் போலிருக்கிறது. இங்கேயே வந்து சேர்ந்துவிடும்படி நான் அவர்களுக்கு எத்தனையோ தடவைகளில் எழுதியாய் விட்டது. அது விஷயத்திலும் அவர்கள் ஒரே பிடிவாதமாக இருக்கிறார்கள். அவ்விடத்தில் அவர்க ளுடைய செளகரியங்களைக் கவனிப்பதற்கு எத்தனையோ தவசிப்பிள்ளைகள் முதலியோர் இருந்தாலும், அதெல்லாம் சொந்த மனிதர்கள் கூட இருப்பதற்குச் சமானமாகுமா? உண்மையில் அவர்களுக்கு இந்த நிலைமை பொறுக்க முடியாததாகத்தான் இருக்கும். அதற்குத் தக்கபடி நாம் எவ்விதமான பரிகாரமும் செய்யாமல் தத்தளித்துக் கொண்டிருக் கிறோம். இந்த நிலைமையில் அவர்கள் எழுதியுள்ள இந்த அற்ப காரியத்தையாவது நாம் செய்யாவிட்டால் நம்மைப் போன்ற மகா பாவிகள் வேறே யாரும் இந்த உலகத்தில் இருக்க மாட்டார்கள். நாம் இங்கே இல்லாமல் அங்கே இருந்தால், உன் மாமனாருக்கு ஆகவேண்டிய பணிவிடைகளையெல்லாம் நீயே செய்யவேண்டியவள் அல்லவா? ஆகையால், நீ பையனை அழைத்துக் கொண்டு உடனே போவது அத்யாவசியமான காரியமென்று நினைக்கிறேன்' என்றார். அதைக் கேட்ட மனையாளின் முகம் மாறி இன்பத்தையும் துன்பத்தையும் காட்டியது. தனது மாமனாருடைய துயரத்தைப் போக்கத் தாங்கள் கடமைப்பட்டவர்கள் என்பதையும், தனது பிராணபதியின் நோக்கப்படி தான் நடந்துகொள்ள வேண்டிய வள் என்பதையும் அவள் நன்றாக உணர்ந்தாள். ஆதலால், அவரது ஆக்ஞையைத் தான் சந்தோஷத்தோடு ஏற்றுக் கொண்ட்தாகக் காட்ட முயன்றாள். ஆயினும், தான் என்றும் பிரிந்தறியாத தனது உயிர்நிலை போன்ற புருஷரை விட்டுப் பிரிந்து போகவேண்டுமே என்ற வேதனையும் ஏக்கமும் தாமாகவே வந்து அந்த சந்தோஷத்தைக் குலைத்து அவளது முகத்தை விகாரப்படுத்தின. ஆயினும், அந்த மாதுசிரோன்மணி தனது சஞ்சலத்தை அதிகமாய் வெளியில் காட்டாமல் அடக்கிக்கொண்டு பேசத் தொடங்கி, "நாங்கள் மாத்திரந்தான் போகிறதா? எஜமானர் வருவதில்லையா?” என்று நயமாகவும்