பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 செளந்தர கோகிலம் போய்விட்டது. உடம்பு அபாரமாகத் தவித்துத் தடுமாறியது. நம்முடைய பங்களாவிலேயே தனியான ஒரு விடுதியை அவர்களுக்கு ஒழித்துக் கொடுப்பதாகவும், அவர்கள் தங்களுடைய சாந்தி கலியாணச் சடங்கை இங்கேயே ஆநந்தமாக முடித்துக்கொண்டு போகலாம் என்றும் நான் சொன்னேன். அந்தப்பெண் மகா புத்திசாலி, நல்ல குணவதி. அவள், 'அம்மணி தாங்களும் தங்கள் பர்த்தாவும் சுத்தமாய் அணைந்துபோன எங்கள் குடும்ப விளக்கை ஏற்றிவைத்த தொன்றே எங்களுக்கு ஒரு கோடி பெறுமே! தங்களுடைய நிலைமைக்கு நாங்கள் ஒரு புழுவுக்குச் சமானம். தாங்கள் எங்களை ஒரு பொருட்டாக எண்ணி இவ்வளவு தூரம் எங்களுக்குப் பெருமை கொடுத்து எங்களைக் காப்பாற்றினர் களே. இவ்வளவே போதுமானது. நாங்கள் இன்னும் அதிக உரிமை பாராட்டி இவ்விடத்தில் இருந்து, எங்கள் குடும்பக் காரியங்களைச் செய்ய எத்தனிப்பது துணிச்சலும் துடுக்குமான செய்கை. எங்களுடைய யோக்கியதைக்குத் தகுந்த ஒரு சாதாரணமான இடத்திலிருந்தே, நாங்கள் எங்கள் காரியங்களை நடத்திக்கொள்வது தகுதியானது. ஆகையால், நாங்கள் எங்களுடைய ஊருக்கே போய் விடுகிறோம். தாங்கள் உத்தரவு கொடுக்கவேண்டும்” என்று கெஞ்சி வேண்டிக் கொண்டாள். நான் அவளுக்குப் புதிய புடவை, ரவிக்கைகள், நகைகள், பணம், வேஷ்டி முதலிய பொருள்களைக் கொடுத்து அனுப்பிவிட்டுத் தான் இங்கே தங்களிடம் வந்தேன்' என்றாள். அதைக் கேட்ட திவான் அளவற்ற மகிழ்ச்சியும் குதூகலமும் தோற்றுவித்து, "பேஷ்! நல்ல காரியம் செய்தாய்! மற்ற எல்லாவற்றையும்விட, சந்தர்ப்பத்தில் நீ இம்மாதிரி பெரும் புத்தியோடு நடந்துகொள்வதுதான் எனக்கு உன் விஷயத்தில் அவ்வளவென்று சொல்ல முடியாத பெருத்த சந்தோஷத்தை உண்டாக்குகிறது. ஏராளமான ஐசுவரியமுள்ள பெரிய மனிதர் வீட்டுப் பெண்பிள்ளைகள் அநேகமாய் கிருபன சிரோன்மணிகள் ஆகவும், பிறரது கஷ்டங்களை உணராதவர்களாகவும், காருண்யமென்பதே எள்ளளவும் இல்லாதவர்களாகவும், முக்கியமாய்த் தங்களைப் போன்ற பெண்பாலர் கஷ்டப்படு கிறார்கள் என்றால், அவர்களை வெட்டு என்கிறவர்களாகவும்