பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 15 வில்லை. தனது தாயும் அக்காளும் எப்போதும் ஒரே கட்சி என்றும், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறவர்கள் என்றும் செளந்தரவல்லியம்மாள் தனக்குள் நினைத்து மிகுந்த கோபமும் ஆத்திரமும் அடைந்தவளாய், அவ்விடத்தைவிட்டு முறுக்காக நடந்து தனது அந்தப்புரத்திற்குப் போய்க் கட்டிலின் மேல் குப்புறப்படுத்துக்கொண்டாள். அதன் பிறகு அவள் அன்றைய ராத்திரி போஜனத்திற்கே வரவில்லை. தனது தாயும் பணிமக்களும் எவ்வளவோ நயந்து வேண்டிய தெல்லாம் பயனற்றுப் போயிற்று. மறுநாட் காலையில், நிச்சய தார்த்தத்திற்கு எல்லோரும் அவளை எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தனர். அவள் எதற்கும் அசையாமல் கல்போலப் படுத்துப் பிணங்கிக் கொண்டிருந்தாள். முகூர்த்தத்திற்கு ஏற்படுத்தப்பட்டி ருந்த காலம் நெருங்கிப் போனதைக் கருதி பூஞ்சோலையம்மாள் அவளை அதே நிலைமையில் விட்டுப் போக நேர்ந்தது. அதன் பிறகு கோகிலாம்பாளுக்கு நலங்கு நடந்த காலத்தில் போலீசார் வந்து, திருட்டுக்குற்றம் சுமத்திக் கண்ணபிரானுக்கு விலங்கிட்டு அவனை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள் என்பதைக் கேட்டபிறகே, செளந்தரவல்லியின் மனம் சிறிது குளிர்ந்தது. அவளது முகம் சந்தோஷத்தினால் மலர்ந்தது. மற்ற சகலமான ஜனங்களும் விசனக்கடலில் ஆழ்ந்து அவமானத் தினால் குன்றிப்போயிருந்த காலத்தில் அவள் ஒருத்தியே மிகுந்த உற்சாகமும் குது.ாகலமும் அடைந்தவளாய்த் தனது படுக்கையை விட்டு எழுந்து சென்று, நீராடித் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு, சமையலறைக்குப் போய் எல்லோருக்கும் தயாரிக்கப் பட்டிருந்த விருந்தைச் சம்பிரமமாக உண்டு, தாம்பூலம் தரித்துக் கொண்டு தனது சயன அறைக்கு வந்து சேர்ந்தாள். அவள் அவ்வாறு திரும்பி வந்தபோது, கோவிந்தபுரம் ஜெமீந்தாரரது குமாரரான சுந்தரமூர்த்தி முதலியார் தற்செயலாக அவளது திருஷ்டியில் பட்டார். அவர் ஒரு மகாராஜன் போல வெகு சொகுஸ்ாக அலங்கரித்துக்கொண்டு யெளவனமும் அழகும் வடி வெடுத்ததுபோல இருந்ததைக்காண, அவளது மனம் முற்றிலும் அவர்மீது சென்று லயித்துவிட்டது. அவர் தன்னைக் கலியாணம் செய்துகொள்வதாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறது என்பதை அவள் தனது தாய் மூலமாக முன்னரே அறிந்தவளாதலால், அவரது