பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 செளந்தர கோகிலம் பையன், தயாராகிவிட்டது. புறப்படலாமென்று வண்டிக் காரன் சொல்லச் சொன்னான்' என்று நிரம்பவும் பணிவாகவும் பயபக்தி விநயத்தோடும் மறுமொழி கூறினான். உடனே தந்தை, "சரி, நேரமாகிறது. போவோம். தம்பி! என்னைவிட்டுப் பிரிந்து போகிறதைப்பற்றி அம்மாள் நிரம்பவும் வியாகுலப்படுகிறாள். நீ எந்த விஷத்திலும் அம்மாள் சொற்படி நடந்துகொள். அம்மாள் விசனப்படாமல் இருக்கும்படி நீ பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படியே செய்வாயா?” என்றார். சிறுவன், 'அப்பா! உங்களை விட்டுப் பிரிந்து போக எனக்கும் மனமில்லை. இன்று காலைமுதல் என் மனம் இன்னதென்று சொல்லமுடியாதபடி நிரம்பவும் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் தேருக்கு முன் புறப்பட்டு வரும்போது உங்களோடு கூடவே நாங்களும் புறப்பட்டுப் போனாலென்ன? எங்களுக்கு மாத்திரம் முன்னால் அவ்விடத்தில் என்ன வேலை இருக்கிறது?’ என்று மழலையாக மொழிந்தான். அதைக் கேட்ட திவான் அன்டாக, “இல்லையப்பா! உன்னுடைய தாத்தா நீங்கள் இருவரும் முன்னால் வரவேண்டுமென்று எழுதித் தவசிப்பிள்ளையையும் அனுப்பி இருக்கிறார்கள். நாம் அவர்களுடைய பிரியப்படிதான் நடந்துகொள்ள வேண்டும்; ஆகையால், நீங்கள் முன்னால் போங்கள். பின்னால் நானும் வந்து விடுகிறேன். நடுவில் அதிக தினங்கள் இல்லை. அதுவரையில் எப்படியாவது பொறுத்திருங்கள். அம்மாள் விசனப்படாமல் நீ பார்த்துக்கொள்ள வேண்டியதை விட்டு, நீயே அழுதுகொண்டிருந்தால், பிறகு அம்மாள் பாடு விபரீதத்துக்கு வந்து விடும். என்ன சொல்லுகிறாய்? நான் சொன்னபடி செய்வாயா?-என்றார். அதைக் கேட்ட இளஞ்சிறான் உடனே தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டு, 'அப்படியே செய்கிறேன் அப்பா! தாத்தாவினுடைய இஷ்டப்படிதான் நாம் நடந்துகொள்ள வேண்டும்” என்றான். அவ்வளவோடு அவர்களது சம்பாஷணை முற்றுப்பெற்றது. அதன் பிறகு அம் மூவரும் மெளனத்திலும் விசனத்திலும் ஆழ்ந்து