பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 செளந்தர கோகிலம் நமது திவான் மனவொளி மழுங்கப் பெற்றவராய் உயிரற்ற சவமோவெனும்படி அப்படியே தமது ஆசனத்தில் சாய்ந்து விட்டார். சாய்ந்தவர் வெகுநேரம் வரையில் அசைவற்று ஒய்ந்து ஏக்கம், விசனம், வேதனை முதலிய பலவகைப்பட்ட உணர்ச்சிகளால் உலப்பப்பட்டவராய்ச் சோர்ந்து தளர்ந்து கிடந்தார். தமது மனம் கோணாதபடி லலித குணத்தோடு தம்மிடம் எப்போதும் நடந்து வாஞ்சையே வடிவாக இருந்து வந்தவளான தமது மனையாட்டியையும் புத்திரனையும் விடுத்து அவர் அதற்குமுன் பிரிந்தே அறியாதவர். ஆதலால், திடீரென்று நேர்ந்த அந்தத் தனிமை அவரால் சகிக்கவே கூடாத நரக வேதனையை உண்டாக்கியது. அவர்கள் இருவரையும் தாம் கூடுகிற வரையில் அந்த மாளிகையில் தனிமையில் எப்படி இருப்பது என்ற கவலையும் சஞ்சலமும் அப்போதே தோன்றிப் பெருகி வதைக்கலாயின. எந்த இடத்தைப் பார்த்தாலும், எந்த வஸ்துவைப் பார்த்தாலும், அங்கங்கு தமது மனையாளும், புதல்வனும் சிரித்த முகத்தோடு நிற்பதுபோன்ற சாயல் அவரது அகக்கண்ணுக்குத் தோன்றியது. அவர் போஜனம் செய்வதற்கு நேரமாகிவிட்டதென்று சமையற்காரன் ஒருவன் வந்து கூறிய பிறகே அவர் நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து தமது சுய உணர்வை ஒருவாறு பெற்றார். அவருக்கு போஜனத்திலேயே நாட்டம் உண்டாகவில்லை. ஆனாலும், அவனது வற்புறுத் தலைத் தடுக்க இயலாதவராய் எழுந்து சென்று வேண்டா வெறுப்பாக இரண்டொரு கவளம் உட்கொண்டபின் எழுந்து வந்து தமது உத்தியோக அலுவல்களை அடியோடு மறந்து கட்டிவில் படுத்துவிட்டார். படுத்தவர் பிறகு மறுநாட்காலையிலேயே அதை விட்டுக் கீழே இறங்கினார். தாம் அந்த மாளிகையில் தனிமையில் இருப்பது ஆயிரம் தேள்களால் கொட்டப்பட்டுக் கொண்டிருப்பது போல அவருக்குத் தோன்றியது. அதற்குமுன் அவருக்கு அழகாயும், இனிமையாயும் தோன்றிய வஸ்துக்கள் எல்லாம் அப்போது அழகற்று, சுவையற்று, வெறுக்கத் தக்கவையாய்த் தோன்றின. நாற்காலியில் உட்கார்ந்தாலும், எழுந்து உலவினாலும், மற்றவரோடு பேசினாலும், உத்தியோக சம்பந்தமான காகிதங்களைப் படித்தாலும், அது ஏதோ கசப்பான