பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 175 வஸ்துவாக விளங்குவதுபோலவே இருந்தது. பொழுதுபோவது பரமவேதனையாகத் தோன்றியது. ஆகவே, தாம் உடனே அந்த மாளிகையை விட்டுப் புறப்பட்டு தொலை தூரத்திலுள்ள ஏதாவது ஊருக்குப் போய் முகாம் போட்டால், அப்போதாவது பிரிந்து போனவர்களின் நினைவு அவ்வளவாகத் தம்மை வருத்தாதென்ற ஒர் எண்ணம் உதித்தது. ஆகையால் அவர் அவ்வாறே செய்வதென்று தீர்மானித்துக்கொண்டார். அவர் அதற்குமுன் அடிக்கடி வெளியூர்களுக்குப் போகும் காலத்தில், காந்திமதியம்மாளும், அவர்களது புதல்வனும் அவர்களுடன் கூடவே தொடந்து செல்வார்கள். ராஜாபகதூருக்குப் பிரத்தியேக மான ஒர் உபாத்தியாயர் நியமிக்கப்பட்டிருந்தார். ஆதலால், அவரும் அவர்களுடன் கூடவே பிரயாணம் செய்து, அவனுக்குக் கல்வி பயிற்றுவிப்பது வழக்கம். காந்திமதியம்மாள் தங்களது மாளிகையை விட்டு வெளியில் புறப்பட அசந்தர்ப்பமான நிலைமை ஏற்படும் சமயங்களில் மாத்திரம் திவான் மற்ற எல்லோரையும் வீட்டில் விட்டுத் தாம் மாத்திரம் சுற்றுப் பிரயாணம் போய் அதிக காலம் வெளியில் இராமல் சீக்கிரம் திரும்பி வந்து விடுவார். அத்தகைய அசந்தர்ப்பத்தில் தாம் மாத்திரம் தனிமையில் போவதுபோல இப்போதும் போய் விடுவதே தமது பிரிவாற்றாமைத் துன்பம் குறைவதற்கு அநுகூலமான காரியமென்று எண்ணி திவான். முதலியார் காந்திமதியம்மாள் திருவடமருதூருக்குப் புறப்பட்டுச் சென்ற தினத்திற்கு மறுநாள் காலையிலேயே திருவனந்தபுரத்தை விட்டு சுமார் முப்பது மைல் தூரத்திற்கு அப்பாலிருந்த ஒர் ஊருக்குப் போய்விட்டார். அவர் முகாம் செய்யுமிடங்களில் தமக்கென்றே பிரத்தியேகமாய் அமைக்கப்படும் பங்களாப்போன்ற பிரமாண்டமான கூடாரத்தில் இறங்கி இருப்பது வழக்கம். ஆதலால், கூடார சாமான்களும், அவருக்கும் அவரது மனைவி மக்களுக்கும் தேவையான போஜனம் படுக்கை உடைகள் முதலிய செளகரியங்களைச் செய்து கொள்வதற்குத் தேவையான பாத்திரங்கள் படுக்கைகள் முதலிய சகலமான பொருள்களும் ஐந்தாறு பெரிய வண்டிகளில் போவது வழக்கம். அவருடன் இரண்டு சமையற்காரர்களும், ஆறேழு ஜெவான்களும் இன்னும் - ஏழுெட்டுச் சில்லரைப் பணியாளர்களும், இரண்டு குமாஸ்தாக்