பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 177 இளம்பி அவர் தமது கவனத்தை வேறு எந்த விஷயத்திலும் செலுத்த இயலாதபடி அவரது மனத்தைப் பிடித்து வாட்டத் தலைப்பட்டன. அவர்கள் அந்நேரம் ரயிலில் போவார்களோ, காந்திமதியம்மாள் தம்மை நினைத்து உருகி அழுகிறாளோ, தமது புதல்வன் அவளுக்கு ஆறுதல் மொழி கூறாமல் வேடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறானோ என்று ஒன்றன் பின் ஒன்றாக மாறி மாறி அவர்களது நினைவே தோன்றி அவரது மனத்தைப் புண்படுத்திக் கொண்டிருந்தது. அவர் படித்துப் பார்த்து உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டிய அவசர விஷய சம்பந்தமான இராஜாங்கக் காகிதங்கள் வந்து வந்து மேன்மேலும் குவிந்து கொண்டே இருந்தன. அவ்வாறு தாம் அவசரமாய்க் கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்குமென்ற காரணம் பற்றியே தாம் தமது மனைவியுடன் அப்போதே புறப்பட்டு திருவடமருதுாருககுப் போகாமல் இருந்தார். ஆகையால், இந்த விஷயங்களைத் தாம் சிறிதும் கவனிக்க இயலாமல் போய் விட்டதே என்றும், அவ்வாறு விணே பொழுதைப் போக்குவதைவிட, தாமும் அப்போதே அவர்களுடன் ஊருக்குப் போயிருந்தால், தங்கள் மூவருக்கும் பிரிவாற்றாமைத் துன்பம் இல்லாமல் போயிருக்குமே என்றும் நினைத்து நினைத்து உருகிய வண்ணம் அவர் படுக்கையிலேயே கிடந்து புரண்டு உழல, பொழுது வளர்ந்து கொண்டே போவதுபோலத் தோன்றி வதைத்தது. அவ்வாறு அவர் அன்றைய பகற் பொழுதை வெகு பாடுபட்டுப் போக்க, மாலை நேரம் வந்தது. தாம் ஒரிடத்திலே இருப்பதைவிட, எழுந்து வெளியில் சிறிது தூரம் சென்று உலாவிவிட்டு வந்தால், அப்போதாவது தமது மனம் அமைதி அடையாதாவென்ற நினைவைக் கொண்டவராய் நமது திவான் முதலியார் சயனத்தை நீத்து மெதுவாக அவ்விடத்தை விட்டு வெளிக்கிளம்பித் தமது கூடாரம் இருந்த இடத்திற்கு அரை பர்லாங்கு தூரத்திற்கு அப்பாலிருந்த ராஜபாட்டைக்குச் சென்று அதன் வழியாக நடந்து செல்லத் தொடங்கினார். அது குளிர்ச்சியான மலைப்பிரதேசம். ஆதலால் ஆகாயத்தை அளாவிய பிரம்மாண்டமான தேக்கு மரங்களும், மருத மரங்களும், நமை மரங்களும், வாகை மரங்களும், தானி மரங்களும், தணுக்கு மரங்களும் தழைத்துச் செழித்து வளர்ந் செ.கோ.:1-12