பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18C செளந்தர கோகிலம் நேரும் என்று அன்போடும் பணிவோடும் கூறி வற்புறுத்தி நயந்து வேண்டிக் கொண்டனர். அவர்களது உருக்கமான வேண்டு கோளை மறுக்க வல்லமையற்ற திவான் அன்றைய தினம் பகலிலும் தமது ஸ்நானம் போஜனம் முதலியவற்றை ஒருவாறாக முடித்துக் கொண்டார். ஆனாலும் அவரது மனம் அப்போது அவரது கட்டிலடங்காமலும், தமது கச்சேரி வேலைகளில் செல்லாமலும் வேரிடத்திற்கே சென்றுகொண்டிருந்தது. முதல் நாள் வந்த தபால்களும் அன்றைய தினம் வந்த தபால்களும் ஏராளமாகக் குவிந்து போயிருந்தன. அதுவுமன்றி, திருவனந்த புரத்திலுள்ள அரசரிடத்திலிருந்து அவசரமாகச் சில கடிதங்களும் வந்திருந்தன. மற்ற கடிதங்களை அவர் அசட்டை செய்தாலும் அரசரது கடிதத்தை மாத்திரம் உடனுக்குடன் பார்த்து மறுமொழி கொடுக்க வேண்டுமென்பது அந்த இராஜாங்கத்தில் நடந்துவந்து அநுஷ்டானம். ஆதலால் அரசரது கடிதங்கள் வந்திருக்கின்றன என்ற அச்சத்தில் அவர் தமது மன வேதனையை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு, உடனே எழுந்துவந்து தமது ஆசனத்தில் அமர்ந்து, அரசனிடத்திலிருந்து வந்திருந்த கடிதங்களையும், தமது பெயர் போட்டு வந்திருந்த சொந்தக் கடிதங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு, மற்றவைகளை தமது பிரதம குமாஸ்தாவே பிரித்துப் பார்த்து ஏதேனும் விசேஷச்செய்தி இருந்தால் தமக்குத் தெரிவிக்கும்படி திட்டம் செய்தபின், அரசரது கடிதங்களைப் படித்து அவைகளுக்குரிய உத்தரங்களை உடனுக்குடன் எழுதி விட்டுத் தமது பெயர் போட்டு வந்திருந்த சொந்தக் கடிதங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் படித்தார். அவற்றுள் நீளமான சர்க்கார் உரையுள்ள ஒரு கடிதம் இருந்தது. அதன் மேல் விலாசம் அவரது பெயருடன் எழுதப்பட்டிருந்தது. ஆகையால் அதையும் அவர் பிரித்துப் படித்தார். படிக்கவே மிகுந்த ஆச்சரியமும் பிரமிப்பும் அடைந்து அந்தக் கடிதத்தை மறுபடி இரண்டொரு தரம் கவனமாகப் படித்தார். அது மஞ்சட்குப்பம் ஜில்லா கலெக்டரான வெள்ளைக்கார் துரையினால் அவருக்கு எழுதப் பட்டிருந்த முக்கியமான ஒரு கடிதம். தஞ்சை ஜில்லா திருவிட மருதூரில் ஒர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் பல பெரிய மனிதர்களிடம் யாசகம் வாங்கி இங்கிலீஷ் பள்ளிக் கூடத்தில் படித்து பி.ஏ. பரிட்சையில் தேறியிருந்தான்.