பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 183 துரையின் கச்சேரியில் உதவிக் காரியதரிசியா யிருந்த காலத்தில் நமது திவான் முதலியாரும் அதே கச்சேரியில் அந்த துரைக்கு மேற்பட்ட பிரதம காரியதரிசியாயிருந்து அவருக்கு வேலை கற்றுக் கொடுத்ததன்றி, அவர்கள் இருவரும் அப்போது நிரம்பவும் அந்தரங்கமான நண்பர்களாக இருந்தனர். ஆதலால், மேலே குறிக்கப்பட்ட நற்சாகதிப் பத்திரத்தை நோக்கவே, கலெக்டர் துரைக்கு அந்த மனுதாரனது விஷயத்தில் மிகுந்த அநுதாபமும் பிரியமும் உண்டாகிவிட்டன. அந்த நற்சாசுதிப் பத்திரம் அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது : - இந்த நற்சாசுவிப்பத்திரம் கொடுக்கப்பெறும் யெளவனப் புருஷரை நான் நன்றாக அறிவேன். இவர் பி.ஏ.பரீட்சையில் தேறியிருக்கிறார். இவர் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் ஊக்கமாகவும் திறமையாகவும் விரைவாகவும் எந்த வேலையை யும் செய்யும் சுபாவமுடையவர். இவர் மகா புத்திசாலி, நற்குண நல்லொழுக்கம் உடையவர்; எஜமானரிடம் பணிவாகவும் பயபக்தி விநயத்தோடும் நடந்துகொள்ளத் தகுந்தவர். நான் இப்போது திவான் வேலை பார்க்கும் சமஸ்தானத்திலேயே இவருடைய அபார யோக்கியதைக்குத் தக்க ஒரு பெரிய உத்தியோகம் கொடுப்பது எனக்கு எளிதான காரியம். ஆனாலும், இவர் எனக்கு ஒரு விதத்தில் பந்துவாயிருப்பது பற்றி இருவருக்கும் நான் இவ்விடத்தில் உத்தியோகம் கொடுத்தாலும், பிற்காலத்தில் இவரைச் சம்பள உயர்வான வேறு பெரிய உத்தியோகங்களுக்கு மாற்றினாலும், அதைப்பற்றி இவ்விடத்தில் உள்ள இதர சிப்பந்திகள் ஏதாவது வம்பு வளர்ப்பார்கள். ஆதலால், அதற்கு இடங்கொடுக்க எனக்கு விருப்பமில்லை. இவர் எந்தப் பதவியையும் வகிக்க அருகரான கற்பாத்திரர் எந்த கனவானாகிலும் இவருடைய யோக்கியதைக்குத் தகுந்த நல்ல உத்தியோகம் ஒன்று கொடுத்து உதவும் பட்சத்தில், அது எனக்கே செய்யப்பட்ட பேருதவியாக நான் மதிப்பேன். இவரது நன்மையையும் மனதாரக் கோருகிறேன்: என்று நிரம்பவும் பரிவாக எழுதப்பட்டிருந்த நற்சாக்ஷிப் பத்திரத்தைப் படித்த கலெக்டர் துரையின் மனத்தில் இன்னோர் எண்ணம் தோன்றியது. அப்போது சென்னை துரைத்