பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 185 அதைப்போலப் பொய்க் கையெழுத்திட்டு, அவனே அந்த நற்சாகழிப் பத்திரத்தைத் தயார் செய்து கொண்டிருக்கிறான் என்று அவர் உடனே யூகித்துக்கொண்டு அடியில் வருமாறு தமக்குள்ளாகவே சிந்தனை செய்யலானார். 'அகா: இந்த மனிதன் தான் பி.ஏ. பரீட்சையில் தேறி இருப்பதாக எழுதி இருப்பதும், இந்த நற்சாகூவிப் பத்திரத்தைப்போலவே பொய்யாக இருக்குமோ? அது பொய்யாக இருந்தால், அவன் பெரிய உத்தியோகங்களைப் பார்க்க நேரும்போது இவனுடைய திருட்டு எப்படியும் தெரிந்துபோகும். ஆகையால் அந்தத் தகவல் நிஜமாகத்தான் இருக்கவேண்டும். அவ்வளவு தூரம் படித்திருந்தும், இந்த மனிதன் இப்படிப்பட்ட பெருத்த மோசத்தில் இறங்கி இருக்கிறானே? ஒழுங்கான கல்வியினால், மனிதருடைய புத்தி தீrண்யப் படுவதோடு அவர்களுடைய குணங்களும் நடத்தைகளும் செம்மைப்படவேண்டும். நற்குண நல்லொழுக்கத்தை மாத்திரம் உண்டாக்காமல் அறிவை உண்டாக்கும் படிப்பும் ஒரு படிப்பா! சே! இந்த மனிதன் எப்படிப்பட்ட படுமோசத்தில் இறங்கிவிட்டான். ஏழ்மைத் தனமும் பணத்தாசையும் எப்பேர்ப்பட்ட புத்திசாலியையும் எப்படிக் கெடுத்துவிடுகின்றன. என் கையெழுத்தைப்போல இவன் போலிக் கையெழுத்திட்டதான இந்தக் குற்றத்திற்கு நியாயமாக இவன் ஏழு வருஷ காலம் கடினக்காவல் தண்டனை அடையத் தகுந்தவன். படிக்காத மூடன் அறியாமையினால் புரியும் ஒரு குற்றத்தை விட படித்தவன் அதே குற்றத்தைச் செய்வது அதிகக் கடுமையாக தண்டிக்கத் தகுந்தது. இது பொய்க் கையெழுத்தென்று நான் இப்போது மறுமொழி எழுதினால், உடனே இந்த மனிதன் தண்டனை யடைவது நிச்சயம். இவன் இத்தனை வருஷம் அரும்பாடு பட்டுக் கற்ற கல்வியும், பெற்ற பட்டமும் வியர்த்தமாய் முடியும். இவனுடைய ஆயுள்கால பரியந்தம் இவன் எல்லோராலும் இகழப்பட்டுத் தலையெடாமல் கேவல நிலைமையில் இருந்து அழிவது நிச்சயம். இவனைச் சார்ந்து இவனையே சதமாக எண்ணி இருக்கும் இவன் தாய் தகப்பனார் முதலிய மற்றவர்களும் திக்கற்றவர்களாய்க் கிடந்து உழன்று அழிவது நிச்சயம். சிறைச் சாலையிலிருந்து திரும்பி வந்தபின் இவன் மேன்மேலும் திருட்டுப்புரட்டு முதலிய கெட்ட