பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 செளந்தர கோகிலம் காரியங்களில் இறங்கிப் பலருக்கும் தீங்கிழைத்துத் தனக்கும் துன்பத்தை விளைவித்துக் கொண்டாலும் கொள்ளலாம். அகவே, இவனை நான் இப்போது தண்டனைக்குக் கொண்டுபோய் முற்றிலும் இவனை அழித்துக் கெடுப்பதைவிட, இவனுக்கு இந்த உத்தியோகம் கிடைக்கும்படி செய்தால், இவன் இதோடு திருந்திப் போவான். இவனுடைய ஏழ்மைத்தனமும் விலகும். இவனுடைய குடும்பத்தாருக்கும் நான் சாப்பாடு போட்டுக் காப்பாற்றியது போலாகும்” என்று திவான் முதலியார் தமக்குத் தாமே எண்ணமிட்டவராய் உடனே ஒரு காகித மெடுத்து மஞ்சட்குப்பம் கலெக்டருக்கு மறுமொழிக் கடிதம் எழுதினார். அண்ணாசாமி என்னும் மனுதாரன் ஒர் ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் ஆகையால், அவன் அபிவிருத்தி அடைந்து முன்னுக்கு வரவேண்டுமென்று தாம் பிரியப்படுவதால், கலெக்டர் துரை அவனுடைய திறமையை நேரில் பரீட்சித்துப் பார்த்து அவனுக்குத் தகுந்த ஒர் உத்தியோகம் கொடுத்து உதவுமாறு அவர் அந்தக் கடிதத்தில் எழுதி முடித்து, அதையும் மற்ற தபால்களையும் அதற்கென்று பிரத்தியேகமாய் நியமிக்கப் பட்டிருந்த அஞ்சல் தபால்காரன் மூலம் கொடுத்தனுப்பி விட்டு, 'உஸ்’ என்று ஒய்ந்து சாய்மான நாற்காலியில் படுத்தார். அப்போது அவரது சமையற்காரர்களுள் ஒருவனான முத்துசாமி என்பவன் சமையலறையிலிருந்து மெதுவாகத் தனது தலையை அவருக்கெதிரில் நீட்டினான். அவனைக் கண்ட திவான், “என்ன விசேஷம்? இரண்டாவது வேளைக்கு ஏதாவது சாப்பிடும்படி கேட்க வந்தாயோ?” என்று புன்னகையோடு கூறினார். உடனே முத்துசாமி வணக்கமாகவும் மரியாதையாகவும் அவருக்கெதிரில் பதுங்கிப் பதுங்கி வந்து, "ஆம் எஜமானே! மணி மூன்றாகிறது. தாங்கள் 11-மணிக்கு போஜனம் செய்தீர்கள். ஆகையால் கொஞ்சம் பலகாரம் சாப்பிடுகிறீர்களா என்று கேட்டுப்போக வந்தேன்' என்றான். உடனே திவான், “என்ன பலகாரம் செய்திருக்கிறாய்?" என்றார். முத்துசாமி, 'மெதுவடையும் ஹல்வாவும் தயார் செய் திருக்கிறேன்” என்றான். - -