பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 செளந்தர கோகிலம் அனுப்பினிரோ என்பது விளங்கவில்லை. என்னுடைய நற்சாக்ஷிப் பத்திரத்திலிருந்து நீர் பி.ஏ. பரீட்சையில் தேறி இருப்பதாகத் தெரிகிறது. இவ்வளவு பெரிய யோக்கியதா பrம் வாய்ந்துள்ள நீர் இனிமேலும் உத்தியோகமில்லாமல் இருந்தால், மறுபடியும் நீர் என்னுடைய நற்சாகூவிப் பத்திரத்தை உபயோகிக்கும்படியான உபத்திரவம் உமக்கு ஏற்படும். என்னுடைய நற்சாriப் பத்திரம் உமக்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொடுக்காமல் வீணாய்ப் போகும் பrத்தில் நீர் இன்னம் வேறு பெரிய மனிதர்களிடம் இதுபோலவே நற்சாட்சிப் பத்திரங்கள் வாங்கியனுப்புவதான வீண் பிரயாசையை எடுத்துக் கொள்ள நேரும். ஆகையால், அதற்கெல்லாம் இடமில்லாமலும் நீர் இனி உம்முடைய திறமையை உத்தியோக அலுவல்களிலேயே உபயோகித்து முன்னுக்கு வரவேண்டுமென்ற எண்ணத்தோடும், நான் உம்மைப்பற்றி கலெக்டருக்கு சிபார்சு செய்திருக்கிறேன். நீர் கோரி இருக்கும் உத்தியோகத்தை விடப் பெரிய உத்தியோகம் உமக்குக் கிடைக்கலாமென்று நான் உறுதியாக நம்புகிறேன். நீர் நற்சாr பத்திரத்தை உபயோகித்த சந்தர்ப்பம் இதுவே கடைசியாய் இருக்கவேண்டுமென்று நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் உமக்குத் துணை இருந்து, நீர் சன்மார்க்கத்திலேயே நடந்து, நியாயமான வழியில் பொருள் தேடி, முன்னுக்கு வந்து, உமது ஆயுள் காலம் முடிய rேமகரமாய் இருக்க அருள்புரிவாராக. - என்று திவான் முதலியார் கடிதம் எழுதி முடித்து அதை உறையில் போட்டு மேல்விலாசம் எழுதி முத்திரை ஒட்டி வாயை மூட, அப்போது சமையற்கார முத்துசாமி அங்கே வந்து, “எஜமானே! தபால் ஆபீசுக்குப் போய் விசாரித்தேன். அவர்கள் காகிதங்களையெல்லாம் எடுத்து முத்திரை போட்டுக் கொண்டிருந்தார்கள்; இன்னம் கால் மணிக்குள் கட்டுக்கட்டி விடுவார்கள். தங்களுடைய கடிதம் ஒன்று வருமென்றும் அதுவரையில் நிறுத்தி வைக்கும்படியும் நான் சொல்லிவிட்டு வந்தேன்” என்றான். உடனே திவான் தாம் எழுதி வைத்திருந்த கடிதத்தை அவனிடம் கொடுத்து, "சரி, நீயே இதை எடுத்துக் கொண்டு