பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதுர் 189 போய் நேரில் போஸ்டு மாஸ்டரிடம் கொடுத்து இதைத் தவறாமல் கட்டில் சேர்த்தனுப்பச் சொல்லிவிட்டு வா" என்று கூற, முத்துசாமி கடிதத்தை வாங்கிக்கொண்டு விரைவாக வெளியில் ஒடினான். அப்போது திவானினது மனதில் இன்னொரு நினைவு உண்டாயிற்று. தமது மனைவியும், புதல்வனும் இன்ன தினம் புறப்பட்டுத் திருவிடமருதூருக்கு வருகிறார்களென்று தாம் தமது தந்தைக்கு மறுபடி ஒரு கடிதம் எழுதவேண்டுமென்றும் காந்திமதியம்மாளுக்குத் தேறுதல் கூறி, அவளுக்குத் தனியாக ஒரு கடிதம் எழுத வேண்டுமென்றும் அவர் தீர்மானித்துக் கொண்டார். அந்த இரண்டு கடிதங்களையும் எழுதி முடிப்பதற்கு இரண்டொரு நாழிகை காலமாவது பிடிக்கும். ஆதலால், அதற்கு முன்னரே தமது சிற்றுண்டி போஜனத்தை முடித்துக்கொண்டு அந்த வேலையில் இறங்க வேண்டுமென்று நினைத்து உடனே தமது இன்னொரு சமையற்காரனான கந்தனை அழைத்தார். அவர்கள் இருவரும் ஒவ்வொரு நாளில் ஒவ்வொருவர் சமையல் செய்வதென்று முறை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். அன்றைய தினம் முத்துசாமியின் முறையாதலால், வடை, ஹல்வா முதலியவற்றை அவனே தயாரித்து வைத்திருந்தான். ஆயினும் திவான் தமது வேலையைக் கருதி கந்தனை அழைத்து, அடேய்! கந்தா வடையும் ஹல்வாவும் செய்து வைத்திருப்பதாக முத்துசாமி சொன்னான். எனக்குப் பசியே உண்டாகவில்லை. ஆனாலும், முத்துசாமி மறுபடி வந்து தொந்தரவு கொடுக்காமல் இருப்பதற்காக அந்த வேலையை முடித்துக் கொள்ளுகிறேன். நீ போய் இரண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக்கொண்டு வா’ என்றார். அவன் அவ்வாறே சென்று சுத்த ஜலமும், சிறிதளவு பலகாரமும் கொணர்ந்து கொடுக்க, திவான் தமது கை கால்களைச் சுத்தி செய்துகொண்டு சிற்றுண்டிகளை வாங்கி உண்டு அந்த வேலையை முடித்துக்கொண்டு மறுபடி உட்கார்ந்து மனையாட்டிக்குக் கடிதம் எழுதுவதை முதலில் துவக்கிக் கொண்டார். பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போய் உள்ளே வைத்த கந்தன் மறுபடி திவானுக்கெதிரில் வந்தான். வந்தவன்