பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 செளங்கா கோகிலம் வாழை இலையில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பொட்டலத் தைக் கொணர்ந்து அவருக்கெதிரில் பிரிக்க, அதற்குள் நான்கு வடைகள் இருந்தன. அவன் திவானைப் பார்த்து, "எஜமானே! நான் பாத்திரங்களை அலம்பி அலமாரியில் கவிழ்த்து வைக்கப் போனேன். அங்கே இந்தப் பொட்டலம் மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது. முத்துசாமி தங்களுக்குச் செய்யும் பலகாரங்க ளோடு, தனக்கும் எனக்கும் செய்து வைத்திருக்கிறான். அப்படியிருக்க, இப்படி தான் வடைகளை எடுத்துக் கட்டி ஏன் மறைத்து வைத்தான் என்பது தெரியவில்லை. நேற்று காலையில் நாம் இந்த ஊருக்கு வந்தது முதல் இவ்விடத்தில் பாத்திரங்கள் சுத்தி செய்வதற்காக ஒரு வேலைக்காரப் பெண் வந்திருக்கிறாள். அவளிடத்தில் முத்துசாமி அடிக்கடி ஜாடைக் காட்டிப் பேசுவதை நான் பார்த்தேன். அவளுக்குக் கொடுப்பதற்காகவே இதை அவன் ஒளித்து வைத்திருக்கிறான் போலிருக்கிறது. இதைத் தற்செயலாக எஜமான் பார்த்து, இது யாருக்கென்று அவனிடம் கேட்டால், அவன் என்மேல் பழி சுமர்த்திவிடுவான். இரண்டு பேர் இருந்து வேலை செய்யும் இடத்தில் அவன் இம்மாதிரி செய்வது எனக்கு அச்சமாக இருக்கிறது. அகையால், எஜமான் அவனைக் கண்டித்து வைக்கவேண்டும். அவன் செய்யும் காரியத்தினால் எனக்கும் பெருத்த அபக்கியாதி வரும்போல இருக்கிறது” என்றான். அதைக் கேட்ட திவான் அவனைப் பார்த்து இனிமையாகப் புன்னகை செய்து, 'கந்தா எந்த வஸ்துவானாலும் தொண்டை வரையில்தானேயப்பா ருசியாக இருக்கும். அதற்குமேல் அது ருசிக்காது. அப்படிப்பட்ட அற்ப சுகத்தை உண்டாக்கும் கேவலம் நான்கு வடைகளை முத்துசாமி எடுத்துத் தனியாக வைத்துவிட்டால், அதனால் என்னுடைய குடி முழுகிப் போய்விடுமா? நீ சொல்வதுபோல அதை நானே கண்டிருந்தால், அது என்னவென்றே நான் கவனிக்க மாட்டேன்; அது யாருக்கு வைக்கப்பட்டிருந்ததென்றும் கேட்டிருக்க மாட்டேன். ஆகையால், அவன் உன்மேல் பழிசுமத்தும்படியான சந்தர்ப்பமே நேர்ந்திராது. அவன் வேறே யாருக்கும் எடுத்து வைக்க வில்லையே. நமக்குப் பாத்திரங்கள் தேய்க்கும் வேலைக் காரிக்குத்தானே வைத்தான். இவ்வளவு பெரிய திவான் வீட்டில்