பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதூர் 193. அவள் வந்து வேலை செய்வதும், அவளுக்கு இங்கே நான்கு வடைகள் கிடைக்கா விட்டால், அவளுக்கு வேறே யார்தான் கொடுக்கப் போகிறார்கள்? கந்தா இருந்திருந்து, உன் புத்தி இந்த அற்ப விஷயங்களிலெல்லாம் போனது ஆச்சரியமாக இருக்கிறது. நீயும் சரி, அவனும் சரி, ஒருவன்மேல் மற்றவன் புகார் சொல்லாமல் இருவரும் ஒற்றுமையாய் இருக்கவேண்டும், உனக்குப் பிரியமானால், நீயும் வடைகளை எடுத்து உனக்கு வேண்டிய மனுஷ்யாளுக்குக் கொடப்பா நமக்குக் கடவுள் ஏராளமான ஐசுவரியத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இதனால் நான் ஏழையாய் விடமாட்டேன். நீ போய் உள்ளே வேலை இருந்தால் பார். எனக்கு அவசரமான அலுவல் இருக்கிறது. நான் அதைக் கவனிக்கிறேன்” என்று கூற, அதைக்கேட்ட கந்தன் மிகுந்த அவமானமும் முகவாட்டமும் அடைந்து அவ்விடத்தை விட்டு உள்ளே போய்விட்டான். போனவன், திவானுக்குக் கொடுத்த பிறகு மிஞ்சியிருந்த வடைகளுக்குமேல், தான் கொண்டுபோன நான்கு வடைகளை யும் போட்டுவிட்டு மனவருத்தத்தோடு வெளியில் போய் விட்டான். தபால் ஆபீசுக்குப் போயிருந்த முத்துசாமி திவானுடைய கடிதத்தைத் தபால் கட்டில் சேர்த்துவிட்டு விரைவாகத் திரும்பி ஓடிவந்து கூடாரத்தை அடைந்து சமையலறைக்குள் சென்று வடைகள் வைத்திருந்த பாத்திரத்தைப் பார்த்தான். திவான் நான்கு வடைகளே சாப்பிட்டாராதலாலும், அவனால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த நான்கு வடைகளைக் கந்தன் எடுத்துக் கொணர்ந்து அந்தப் பாத்திரத்தில் போட்டிருந் தானாதலாலும், பாத்திரத்திலிருந்த வடைகள், தான் வைத்து விட்டுப் போனது போலவே அவனுக்குத் தோன்றின. ஆகவே, திவான் சிற்றுண்டி போஜனம் செய்துவிட்டார் என்று அவன் சந்தேகிக்க ஏதுவில்லாதிருந்தது. அதுவுமன்றி, கால் மைல் தூரத்திலிருந்த தபால் ஆபீசுக்கு அவன் இரண்டு தரம் ஒட்டமாய்ப் போய் ஒட்டமாய்த் திரும்பி வந்தமையாலும், அவன் காலையில் போஜனம் செய்து வெகு நேரமாகி விட்டமையாலும், அவனுக்குப் பசியும் தாகமும் உண்டாகி விட்டன. ஆகையால், அவன் வடைப்பாத்திரத்தின் பக்கத்தில் உட்கார்ந்து மிகுந்த ஆவலோடும் விரைவாகவும் ஐந்தாறு