பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 செளந்தர கோகிலம் வடைகளை எடுத்து முறித்து வாயில் போட்டுத் தின்று ஒரு - செம்பு தண்ணிரைப் பருகியவுடன் அவ்விடத்தைவிட்டு திவான் இருந்த இடத்திற்குச் சென்றான். அவ்வாறு செல்வதற்குள் அவனது தேகத்தில் இன்னதென்று விவரிக்க இயலாத ஒருவித உபத்திரவம் உண்டாகத் தொடங்கியது. தொண்டையில் அதிகமான வரட்சியும் முறுக்கலும் தோன்றின. மூளை சுழலத் தொடங்கியது. கால்கள் தள்ளாட ஆரம்பித்தன. அந்த நிலைமையில் திவானுக்கெதிரில் போய் நின்ற முத்துசாமி, 'எஜமானே கடிதத்தை தபால்கட்டில் சேர்த்துவிட்டேன்’ என்றான். அதைக் கேட்ட திவான், “சரி, நீ போ' என்றார். உடனே முத்துசாமி, நாழிகை ஆகிறதே. எஜமானுக்குப் பலகாரம் கொண்டு வரலாமா?” என்று நிரம்பவும் பணிவாகவும் வண்க்கமாகவும் கூறினான். திவான், 'நான் பலகாரம் சாப்பிட்டு விட்டேன். நீ போன பிற்பாடு கந்தனைக் கூப்பிட்டுப் பலகாரம் கொண்டுவரச் சொல்லிச் சாப்பிட்டுவிட்டேன். போய் உன் காரியத்தைப் பார்?' என்றார். உடனே முத்துசாமி, "எஜமானே! நான் தங்களுக்காகச் செய்து வைத்திருந்த வடைகள் எல்லாம் அப்படியே இருக்கின்றனவே. தாங்கள் ஒன்றுகூட எடுத்துக் கொள்ளவில்லை போலிருக்கிறதே'என்றான். அதைக் கேட்ட திவான், "இல்லை, முத்துசாமி! நான் நான்கு வடைகள் சாப்பிட்டேன். ஒருவேளை காரியம் இப்படி நடந்திருக்கலாம். நான் பலகாரம் சாப்பிட்ட பிறகு கந்தன் அலமாரியண்டை போனானாம். அவ்விடத்தில் நான்கு வடைகள் இலையில் பொட்டலமாகக் கட்டி வைக்கப்பட்டிருந் தனவாம். அதை அவன் எடுத்துவந்து என்னிடம் காட்டி, நீ அதை யாருக்கோ கொடுப்பதற்காக வைத்திருக்கிறாயென்றும், யாருக்காவது கொடுக்கவேண்டுமென்றால் இப்படி ஒளித்து வைக்காமல் தாராளமாக நேரில் எடுத்துக் கொடுக்கலாமென்றும், இப்படி ஒளித்துவைத்தால் மற்றவர் பேரில் சந்தேகம் ஏற்படுமே