பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 செளந்தர கோகிலம் இனி இரண்டொரு நாழிகை காலத்திற்குமேல் உயிரோடிருக்கப் போகிறதில்லை. அதற்குள் தாங்கள் என்னுடைய குற்றத்துக்குத் தக்க கடுமையான தண்டனை விதித்து விடவேண்டும். நான் கொலைக்குற்றம் செய்ய எத்தனித்த மகா பாதகன், உங்களிடம் கத்தி முதலிய ஆயுதம் ஏதாவது இருந்தால், என் கை கால்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் வெட்டி என்னைச் சித்திரவதை செய்யுங்கள். சுவாe ஆண்டவனே! தாமதிக்காமல் அந்தக் காரியத்தை நிறைவேற்றுங்கள்’ என்று நிரம்பவும் உருக்கமாக மன்றாடிக் கூறினான். அவன் திடீரென்று கீழே வீழ்ந்ததைக் கண்டும், அவன் கூறிய விபரீதமான சொற்களைக் கேட்டும் திவான் முற்றிலும் திகைப்பும் பிரமிப்பும் அடைந்து அவனை நோக்கி, “அடேய் முத்துசாமி என்னடா இது? நீ சொல்வது எனக்குக் கொஞ்சமும் விளங்கவே இல்லையே! திடீரென்று கீழே விழுந்து, பைத்தியம் கொண்டவன்போல் ஏதோ உளறுகிறாயே! எழுந்து நின்று சங்கதியை நன்றாகச் சொல்' என்றார். உடனே முத்துசாமி கண்ணிரை ஆறாய்ப் பெருகவிட்டு கீழே கிடந்து புரண்டு தவித்த வண்ணம், "எஜமானே! கடவுளே வந்து அவதரித்ததுபோல இருப்பவரும், புண்ணியமூர்த்தியும், பரமதயாளுவும், சர்வஜென ரக்ஷகரும், தர்மமும் நீதியும் சாந்த குணமும் புத்திசாலித்தனமும் உருவெடுத்தது போலிருப்பவரும், இதுவரையில் எனக்கு அன்னமிட்டுக் காப்பாற்றிய மகா உபகாரியுமான தங்களுக்கு விஷம் வைத்துக் கொன்றுவிட வேண்டுமென்ற கருத்தோடு நான் நான்கு வடைகளில் பாஷாணத்தை கலந்து தயார் செய்து அவைகளைப் பொட்டல மாய்க் கட்டி மறைத்து வைத்திருந்து கொஞ்ச நேரத்திற்கு முன், தங்களைத் துாண்டி அவைகளைத் தாங்கள் தின்றுவிடும்படி செய்வதற்காக வந்தேன். தாங்கள் யாருக்கு என்ன விதமான நன்மை செய்வதற்காக அந்தக் கடிதத்தை எழுதி என்னிடம் கொடுத்து என்னைத் தபாலாபீசுக்குத் துரத்தினர்களோ தெரியவில்லை. கடவுள்தான் தங்களுக்கு அந்தச் சமயத்தில் ஏதோ ஒருவித எண்ணத்தை உண்டாக்கி அவசரமாய் என்னை வெளியில் அனுப்பவும், கந்தனை ஏவிக் கொண்டுவரச்செய்து