பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 செளந்தர கோகிலம் சங்கதி கொண்டுவரப் போகிறாய் என்றல்லவா. நான் ஆவலோடு காத்திருக்கிறேன். என்ன விசேஷம்? என்மேல் ஏதாவது கோபமுண்டா?" என்று நயமாகக் கேட்டாள். உடனே புஷ்பாவதி வற்புறுத்தித் தனது முகத்தில் புன்ன கையை உண்டாக்கிக்கொண்டு பேசத் தொடங்கி, "ஐயோ பாவம் உன் மேல் நான் கோபித்துக்கொள்ள நீ என்ன தவறு செய்துவிட்டாய்! அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீ இன்று காலையிலிருந்து வெளியில் வரவே இல்லை. வெளியில் அமர்க் களப்பட்டது. உனக்கு ஒன்றுமே தெரியாதுபோல இருக்கிறதே" என்றாள். - செளந்தரவல்லி, "ஓ! எனக்கு எல்லாம் தெரியுமே! கண்ண பிரானைப் போலீசார் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். யாரோ பாச்சாமியானாம் ஒருவன்; அவன் அந்தக் கற்பகவல்லி யம்மாளுடைய ஆசை நாயகனாம். அவன் கற்பகவல்லியம் மாளை அழைத்துக்கொண்டு போக வந்தான். அவர்களுடைய யோக்கியதையைப் பற்றித்தான் ஊர் முழுதும் சிரிக்கிறதே. அது எனக்குத் தெரியாமல் போய்விடுமா? அக்காள், அம்மாள் இரண்டு பேர்களுடைய கருவமும் கொட்டமும் அடங்கிப் போய் விட்டனவே. அவர்கள் எப்படியாவது போகட்டும்; நமக் கென்ன? நாம் நம்முடைய காரியத்தை முடித்துக் கொண்டு சந் தோஷமாக இருப்போம். அதைப்பற்றி நீ ஏன் விசனப் படுகிறாய்?" என்று கூறினாள். புஷ்பாபவதி, "நீ சொல்லுகிறது சரிதான். இருந்தாலும், இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. இப்போது இருக்கும் நிலை மையைப் பார்த்தால், உன்னைக்கூட என்னுடைய தமயனார் கட்டிக்கொள்ள முடியாது போல் இருக்கிறது. அதனாலேதான் எனக்கு நிரம்பவும் விசனமாக இருக்கிறது; எங்களிடத்தில் அள வற்ற பிரியம் வைத்திருப்பவளும், மகா நற்குணவதியுமான உன்னை நாங்கள் கட்டிக்கொள்ள முடியாமல் இவர்கள் செய்து விட்டார்களே என்பது என் மனசை அறுக்கிறது. அதற்காகத்தான் கடைசி முறையாக உன்னைப் பார்த்துவிட்டு இந்தப் பங்களாவை விட்டுப்போய் விடலாம் என்று நான் வந்தேன்' என்று மிகவும் விசனமாகவும் கலக்கமாகவும் உருக்கமாகவும் பேசினாள்.