பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O2 செளந்தர கோகிலம் ஆதலால், அநேகமாய் ஏதோ ஆள்மாறாட்டமும், தவறும் நேர்ந்திருக்க வேண்டுமென்ற எண்ணமே கோகிலாம்பாளது மனத்தில் தோன்றி, சிறிதளவு மனோதிடத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனாலும், மகா துஷ்ட மனிதர்போலவும் காமாதுரர் போலவும் காணப்பட்ட அந்த மனிதரிடத்தில் தான் தனிமையில் அகப்பட்டுக் கொண்டிருந்தமையால், அவரிடத்தில் இருந்து தான் நிஷகளங்கமாக எப்படித் தப்பிக்கொண்டு போவது என்ற அபாரமான மலைப்பும் கவலையும் திகிலும் எழுந்தெழுந்து அந்த மெல்லியலாளை வதைக்கத் தொடங்கின. அவள் இயற்கையில் சுத்த சாத்விக குணமும், மிருதுத் தன்மையும் உருவெடுத்தது போன்றவள். ஆனாலும், அபாரமான புத்தி சாதுர்யமும், விவகார ஞானமும், சிறந்த பகுத்தறிவும் அவளிடம் பூர்த்தியாக நிறைந்திருந்தன. அதுவன்றி, அவளது தந்தை இறந்தபிறகு, அவரது அளவற்ற ஐசுவரியங்களை எல்லாம் நிர்வகித்துக் காப்பாற்ற வேறு ஆண்மக்கள் எவரும் இல்லாமை யாலும், அவரது மனைவி, இளைய புதல்வி ஆகிய இருவரைக் காட்டிலும் கோகிலாம்பாள் பன்மடங்கு அதிக திறமை வாய்ந்தவளாய் இருந்தமையாலும், வீட்டு நிர்வாகம் முழுதையும் அவளே ஏற்று நடத்தி வந்தவள். ஆதலால், அக்கிரமத்தைக் கண்டு கண்டிக்கும் ஆற்றலும், சிறிதளவு மனத்துணிவும் அவளுக்குப் பழக்கமாகி இருந்தன. ஆகவே, அந்த மின்னற் கொடியாள் அஞ்சி நடுங்கி நாணித் தலைகுனிந்து குன்றிப்போய் துாரவிலகி நின்றாள். ஆனாலும், அவள் முற்றிலும் செயலற்ற கேவலம் அபலையாய்க் காணப்படாமல், தனக்கு எத்தகைய பயங்கரமான அபாயம் நேரிட்டாலும், தான் தனது கற்புநிலை தவறாமல் நடக்கும் மனவுறுதி வாய்ந்தவள் என்பது அவரது மனத்தில் படும்வண்ணம் திடமான முகத்தோற்றத்தோடு காணப்பட்டு ஒருதரம் நிமிர்ந்து சோகப் பார்வையாக அவரை ஒரு பார்வை பார்த்து உருட்டி விழித்தாள். அந்தக் கூரிய பார்வை அவரது இருதயத்தில் ஈட்டிபோலப் பாய்ந்தது. ஆகையால், கட்டிலடங்காதண காமவெறி கொண்டு அவள்மீது பாய ஒடி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அவளது அருவருத்த பார்வையைக் கண்டு ஒருவித அச்சங்கொண்டவராய்த் தயங்கி சடக்கென்று அப்படியே நின்று விட்டார். அதைக் கண்ட