பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 செளந்தர கோகிலம் புத்திசாலியாக இருந்தும், இந்த அற்ப விஷயத்தை நீ தெரிந்து கொள்ளவில்லையா?” என்று சுலபமாகத் தமது கருத்தை வெளியிட்டு மறுமொழி கூறினார். அப்போதே தனது அபாயத்தை உணர்ந்த பெண்ணரசி அளவற்ற பிரமிப்பும், திகைப்பும், கலக்கமும் அடைந்து ஆத்திரப் பார்வையாக அவரை ஒரு பார்வை பார்த்தாள். அவளது கண்கள் கோவைப் பழமாகச் சிவந்து போயின. கைகால்கள் முதலிய அங்கங்களெல்லாம் பதறி நடுங்க ஆரம்பித்தன. அவள் மறுபடி கீழ்ப்பார்வையாக அவரை நோக்கி, 'ஐயா என்ன இது! நீங்கள் பேசும் மாதிரி நிரம்பவும் விநோதமாக இருக்கிறதே! நீங்கள் யாரென்பது எனக்குத் தெரியவில்லை. நான் யாரென்பதும் உங்களுக்குத் தெரியாது. நான் தவறுதலாக இந்த இடத்திற்குள் வந்துவிட்டதைக் கொண்டும், முற்றிலும் முகமறியாத, அன்னிய மனுஷியான என்னிடம் நீங்கள் இப்படித் தாறுமாறான வார்த்தைகளை உபயோகிப்பது நியாயமல்ல. நான் கண்ணிய மான குடும்பத்தைச் சேர்ந்த குலஸ்திரீ உங்களுக்கு என்னைப் போன்ற தங்கைகளோ பெண்களோ இருக்கலாம். அவர்களிடம் அன்னிய புருஷர் இப்படி அவமரியாதையாக நடந்து கொண்டால், அதைக் கண்டு நீங்கள் சகித்திருப்பீர்களா? நீங்கள், வயதான தக்க பெரிய மனிதராகக் காணப்படுகிறீர்கள், உங்களுக்கெதிரில் வேறே யாராவது துஷ்டர்கள் அல்லது போக்கிரிகள் இம்மாதிரி ஒரு ஸ்திரீயிடம் அவமரியாதையாக நடந்துகொண்டால் அதைக்கண்டு நீங்கள் அவர்களைக் கண்டிக்க வேண்டியவர்கள். அப்படி இருக்க, நீங்களே இம்மாதிரி தகாத வார்த்தைகளை உபயோகிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. தயவுசெய்து முதலில் என்னை வெளியில் அனுப்பிவிட்டு மறுவேலை பாருங்கள்' என்று அழுத்தமாகவும் உறுதியாகவும் கூறினாள். அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் சிறிதும் கிலேசம் கொள்ளாமல் மிகுந்த உருக்கமும் மன இளக்கமும் புன்னகையும் தோற்றுவித்து அவளை நோக்கி விளையாட்டாகப் பேசத் தொடங்கி, 'அடி கோகிலா! நீ இப்போது என்னைப் பார்த்து நிரம்பவும் கோபமாகப் பேசினாய். ஆனாலும் உன்னுடைய