பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O6 செளந்தர கோகிலம் கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்த குலஸ்திரீயோ, அதுபோல நானும் மரியாதைப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த நிர்ணயந் தவறாத ஆண்மகன். ஆகையால், எனக்கும் உனக்கும் சரியான பொருத்தம் இருக்கிறது என்று கண்டே, நான் உன்னை இங்கே வரவழைத்தேன். ஆகையால் நீ எந்த வகையிலும் ஆட்சேபணை சொல்ல இடமில்லை' என்றார். அதைக் கேட்ட பெண்மணி மிகுந்த கலக்கமும் திக்பிரமை யும் கலவரமும் அடைந்து தத்தளிக்கலானாள். தன்னை அவர்கள் வஞ்சித்து அவ்விடத்திற்கு அழைத்து வந்துவிட்டார்கள் என்ற நிச்சயம் உடனே அவளுக்கு ஏற்பட்டுவிட்டது. ஆனாலும், அவர்களது சூழ்ச்சிக்குக் கண்ணபிரான் இணங்கி எப்படிக் கடிதம் எழுதிக் கொடுத்திருக்கக்கூடும் என்ற சந்தேகமே எழுந்தெழுந்து வதைக்க ஆரம்பித்தது. அதுவுமன்றி, அந்த மனிதர் அநேகமாய்ப் போலீஸ் இலாகாவைச் சேர்ந்த உத்தியோகஸ்தர் ஆகத்தான் இருக்கவேண்டும் என்ற எண்ணமும் உதித்தது. அத்தகைய துஷ்டரிடம் தனிமையில் அகப்பட்டுக் கொண்டிருந்த தான் அவ்விடத்திலிருந்து எவ்விதம் தப்பித்துப்போவது என்ற கவலையும் மலைப்பும் தோன்றி வதைக்கலாயின. அந்த அருங்குண மடந்தை தனது கடைக்கண் பார்வையை நாற்புறங் களிலும் செலுத்தி அந்த இடத்தின் அமைப்பை ஆராய்ச்சி செய்தாள். அது ஒரு பெட்டிபோல பந்தோபஸ்தாக அமைக்கப் பட்டிருந்தது. புஷ்பங்கள் நிறைந்த நேர்த்தியான பஞ்சனைக் கட்டில் ஒரு பக்கத்தில் போடப்பட்டிருந்தது. சுவர்களில் நிலைக்கண்ணாடிகளும், சிருங்கார ரஸத்தைக் காட்டிய ஏராளமான படங்களும் மாட்டப்பட்டிருந்தன. அறையின் மத்தியில் மேல் பாகத்தில் மின்சார விசிறியொன்று சுழன்று அந்த அறைக்குள் குளிர்ந்த இனிய காற்றைப் பரப்பிக்கொண்டிருந்தது. ஜன்னல்களின் கதவுகள் மூடித் தாளிடப்பெற்றிருந்தன. இன்னம் மேஜை நாற்காலிகளும் ஸோபாக்களும் பூத்தொட்டிகளும், மற்றும் பலவகைப்பட்ட அலங்கார வஸ்துக்களும் நிறைந்து கிடந்தன. தான் தப்பித்துப் போவதானால், அந்த அறைக்கு முன்னாலிருந்த இரண்டாவது அறையின் வழியாகவே திரும்பிப் போவதைத் தவிர வேறு மார்க்கமில்லையென்பது கோகிலாம்பா ளுக்கு உடனே விசிதமாயிற்று. அவ்வாறு தான் அபலையாய்