பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிக்குகைக்குட் புகுந்த பூம்பாவை 209 வந்து தமது வசத்தில் அகப்பட்டுக்கொண்டிருந்தமையால், தாம் எப்படியாவது பலாத்காரம் செய்து அவளது தேகத்தைத் தமது வசப்படுத்திவிடலாமென்ற திடமான நினைவைக் கொண்ட வராய், அந்த மடவன்னத்தை நோக்கி ஏளனமாகப் புன்னகை செய்து, 'கோகிலா! கதவை அப்புறம் தாளிட்டுக் கொண்ட கோவிந்தசாமி இப்போது கதவண்டை இருக்கமாட்டான். அவன் உன்னைக் கொண்டுவந்துவிட்ட பிறகு வேறொரு காரியத்தைக் கவனிக்கும்படி அவனிடம் நான் சொல்லியிருந்தேன். ஆகை யால், அவனாவது வேறே எவராவது இப்போது கதவைத் திறந்து விட பக்கத்தில் இருக்கமாட்டார்கள். ஆகையால், நீ பிரியப் பட்டாலும் படாவிட்டாலும் குறைந்தது ஒரு நாழிகை நேரமாவது நீ என்னோடு இந்தப் படுக்கையறையில் அவசியம் இருந்தே தீரவேண்டும். இந்தப் படுக்கையறையில் ரதிதேவியைத் தோற்கச் செய்யும் அதியற்புதமான அழகு வாய்ந்த ஒரு பெண்ணுடன் நான் ஒரு நாழிகை நேரம் தனிமையிலிருந்தும், நான் அவளைச் சும்மா விட்டுவிடுவதென்றால், நான் ஆண்பிள்ளையிற் சேர்ந்தவனேயாக மாட்டேன். உன்னைப் போல முதலில் துள்ளிக் குதித்த பதிவிரதைகள் எத்தனையோ பேரை நான் பார்த்தாய் விட்டது. இப்படிப் பேசுவது பெண்பிள்ளைகளின் சாகஸங்களில் ஒன்றென்பதை நான் அநுபவத்தில் கண்டறிந்தவன். நீ எப்படி உன்னைப் படைத்த கடவுளே வந்தாலும், உன்னைச் சித்திரவதை செய்தாலும், உன் உயிரே போவதானாலும் என் கருத்திற்கு இணங்கிவரமாட்டாய் என்று உறுதியாய்ச் சொல்லுகிறாயோ அதுபோலவே நானும் உனக்கு என் மனவுறுதியை எடுத்துச் சொல்லுகிறேன். இந்த அண்ட பிண்ட சராசரங்களெல்லாம் இடிந்து விழுந்தாலும், என்னைப் படைத்த கடவுளே வந்து குறுக்கிட்டாலும், என் கருத்து நிறைவேறாமல் தடைப்படப்போகிறதில்லை. உன் உயிர் இருந்தாலும், அல்லது போய்விட்டாலும், எப்படியும் நான் என் தீர்மானத்தை நிறைவேற்றியே தீருவேன். உன்னுடைய சரீரம் என்னுடைய ஆலிங்கனத்திற்கு வராமல் போகாது. இது முக்காலும் திண்ணம். ஆனால், ஒரு விஷயம். ஸ்திரீகளின் தன்மையும் புஷ்பங்களின் தன்மையும் ஒரே விதமானவை. புஷ்பங்களைக் கசக்கி முகர்ந்தால், நமக்கு எவ்விதச் சுகமும் செ.கோ.:1-14