பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 19 அதைக்கேட்ட செளந்தரவல்லி திகைப்பும் பிரமிப்பும் ஏக்கமும் அடைந்தவளாய், “என்ன அப்படிப் பேசுகிறாய்! கடைசி முறையாக என்னைப் பார்க்கிறதாவது? என்னை நீங்கள் கட்டிக் கொள்ளாமல் தடுத்தது யார்? கிழக்கு மேற்காகப் போகும் சூரியன் தெற்கு வடக்காகப் போனால்கூட, நான் உன்னுடைய தமயனாரைக் கட்டிக்கொள்வதைத் தடுக்க யாருக்காவது முடியுமா? விவரத்தை வெளிப்படையாகச் சொல். அதற்குத் தகுந்த வழியை நான் தேடுகிறேன்' என்று உறுதியாகவும் அழுத்தமாகவும் கூறினாள். புஷ்பாவதி கண்கலக்கமும் உருக்கமும் தோன்ற விசனமாகப் பேசத்தொடங்கி, "குழந்தாய்! உன்னுடைய அக்காளும், அம்மா ளும் அவர்கள் விஷயத்தில் ஒரே பிடிவாதமான குருட்டு அபி மானம் வைத்திருக்கிறார்கள். இன்று நடந்த விஷயங்களைப்பற்றி ஊர் சிரிக்கிறது என்பதை இவர்கள் அறியவே இல்லை; கண்ண பிரான், தண்டனை அடைந்தால்கூட, அவர் ஜெயிலில் கூழ் குடித்து செக்கிழுத்துவிட்டு வந்தபிறகும், உன்னுடைய அக்காள் அவரைத்தான் கட்டிக் கொள்ளப்போகிறாளாம். பாச்சாமியான் என்ற துருக்கனை அந்தக் கற்பகவல்லியம்மாள் வைத்திருந்தாள் என்ற மகா பிரமாதமான அவமானம் நேர்ந்ததைக் கண்டும் அவர்களுடைய உறுதி மாறவில்லை. யார் எதை வேண்டுமா னாலும் சொல்லிக் கொள்ளட்டும் என்றும், நம்முடைய ஒப்பந்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம் என்றும் சொல்லிவிட்டார்கள். அந்த பாச்சாமியான் கற்பகவல்லி யம்மாளை இழுத்துக்கொண்டு போயிருப்பான். அதனால் உங்களுக்கு எல்லாம் அவமானம் ஏற்படுமே என்று நினைத்து என் தமயனார் அவனை நயமாக அழைத்துக் கொண்டுபோய் வெளியில் அனுப்பிவிட்டு வந்தார். இங்கே கலியாணத்துக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான ஜனங்கள் எல்லோரும், “இன்னும் இந்தக் கற்பகவல்லியை இந்தப் பங்களாவில் வைத்திருக்கலாமா து! இவர்கள் சுத்த மானங்கெட்ட இழி ஜாதியார். இவர்கள் வீட்டில் இனி நாய்கூடத் தண்ணிர் குடிக்காது. அந்தக் கற்பகவல்லியம்மாள் இனி இந்தப் பங்களாவில் இருந்தால், நீங்கள் செளந்தரவல்லியைக் கட்டக்கூடாது என்றும், கட்டினால் உங்களை நாங்கள் ஜாதி யிலிருந்து விலக்கி விடுவோம் என்றும், என்னுடைய தமய