பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 செளந்தர கோகிலம் உண்டாகாது; புஷ்பமும் நாசமாய்ப் போய்விடும். அதுபோல ஸ்திரீகளையும் அவர்களுடைய மனசு முறியாதபடி அடையவேண்டும். பலாத்காரத்தில் இறங்கினால், அது இரு திறத்தாருக்கும் நல்லதல்ல. அதை எண்ணியே நான் இவ்வளவு தூரம் பொறுமை பாராட்டுகிறேன். இல்லாவிடில் இந்நேரம் உன் கற்பெல்லாம் இருந்த இடம் தெரியாமல் பறந்து போயிருக்கும். ஆனால், நீ என் விஷயத்தில் சில தப்பு எண்ணங்கள் கொண்டிருக்கிறாய் என்பது நன்றாகத் தெரிகிறது; உன்னை நான் அடைய வேண்டுமென்ற கருத்தை, கண்ண பிரான் முதலியார் சிறைப்படுவதற்கு முன்பே கொண்டிருந்ததாக நீ நினைப்பது தப்பான யூகம். தபால் திருட்டில் சம்பந்தப்பட்ட பொருள்கள் அவருடைய வீட்டில் புதைக்கப்பட்டிருந்தது போலீசாரால் செய்யப்பட்டதல்ல. அதை அவரே செய்தாரோ, அல்லது, அவருடைய விரோதிகள் எவராவது செய்தார்களோ, அது எங்களுக்குத் தெரியாது. கண்ணபிரான் முதலியார் சிறைச்சாலைக்கு வந்தபிறகு, தாம் தப்ப வேறு வழி இல்லை என்று கண்டு, எப்படியாவது தம்மைத் தப்ப வைத்தால், நாங்கள் எதைக் கேட்பதானாலும் அவர் கொடுப்பதாக வாக்களித்தார். அப்போது அங்கே இருந்த ஜெவான் ஒருவன் அவரைப் பார்த்து, 'ஐயா! நீர் எதை வேண்டுமானாலும் கொடுப்பதாகச் சொல்லுகிறீரே! நீர் இப்போது கலியாணம் செய்து கொள்ள எண்ணியிருக்கும் பெண்ணின்மேல் எங்களுள் ஒருவருக்கு ஆசை. நீர் ஒரு கடிதம் எழுதியனுப்பி அந்தப் பெண் அந்த மனிதருடைய வீட்டுக்கு வரும்படிச் செய்தால், நீர் தப்பும் படியான மார்க்கத்தை நாங்கள் செய்வோம்’ என்றான். அதைக் கேட்டவுடனே முழு மனதோடு அந்தக் கடிதத்தை எழுதிக் கொடுத்தார். உங்களுடைய பங்களாவில் உன் தாயார், அவருடைய தாயார், இன்னும் உங்கள் உறவினர் முதலிய எத்தனை ஜனங்கள் இருக்கிறார்கள். சாதாரணமாக அவர் தமக்கு ஒத்தாசைக்கு மனிதர் வேண்டுமென்ற கருத்தோடு எழுதி இருந்தால், பெரியவர்களுள் யாரையாவது அழைத்திருப்பாரே யன்றி, கலியாணம் ஆகாத யெளவனப் பெண்ணாக உன்னை அவர் வரவழைத்ததிலிருந்தே அவருடைய உள் கருத்து உனக்குத் தெரியவில்லையா? அவர் இன்னொரு சங்கதியும் சொன்னார்.