பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 செளந்தர கோகிலம் மற்றவரிடம் அது இராதென்றும் நீங்கள் நினைத்துப் பேசுகிறீர்கள் போலிருக்கிறது. நீங்கள் சொல்லும் விஷயத்தை என் வாயில் வைத்துப் பேசவே கூசுகிறது. ஆகையால், அதைப் பற்றி விரிவாகப் பேச நான் இஷ்டப்படவில்லை. இந்தப் படுமோசச் சூழ்நிலையில் என் புருஷரும் சம்பந்தப்பட்டு இருப்பதாக நீங்கள் சொல்வது முழுப் புரட்டு. அவர்கள் தங்களுடைய உயிர் போவதானாலும் இப்படிப்பட்ட மானக் கேட்டிற்கு இணங்கமாட்டார். நீங்கள் சித்திரவதை செய்ததினால் பயந்து அவர்கள் அப்படி ஏதேனும் தவறிச் சொல்வி இருந்தாலும், அது என்னைக் கட்டுப்படுத்தாது. ஒரு ஸ்திரீயைப் பார்த்து அவளுடைய கற்பை இழக்கும்படி கட்டளை இட, அவளுடைய புருஷருக்கும் அதிகாரமில்லை; அவளைப் படைத்த கடவுளுக்குக்கூட அந்த அதிகாரமில்லை என்று நான் துணிந்து சொல்வேன். எங்கள் குடும்பத்தின் யோக்கியதையையும், என்னுடைய மனப்போக்கையும் தெரிந்து கொள்ளாமல் நீங்கள் கேவலம் தாசி வேசைகளிடம் நடந்து கொள்வதுபோல என்னிடம் பேசுவது உங்களுக்குக் கொஞ்சமும் தகாது. இவ்வளவு தூரம் நீங்கள் பைத்தியக்காரத்தனமாய் நடந்து கொண்டதோடு நின்றுவிடுங்கள் மேலும் அக்கிரமத்தில் இறங்கி வீண் கஷ்டங்களையும் அவமானத்தையும் அடையவேண்டாம். தயவு செய்து என்னை முதலில் வெளியில் அனுப்பிவிட்டு மறுவேலை பாருங்கள்' என்று நிரம்பவும் உறுதியாகவும் அலட்சியமாகவும் கூறினாள். இன்ஸ்பெக்டர் அவளைப் பார்த்து ஏளனமாகவும் கோப மாகவும் நகைத்து, "பேஷ்! பேஷ்! பலே! பெண் கெட்டிக்காரி! அடி கோகிலா! நீ எந்தத் தைரியத்தினால் என்னிடம் இப்படித் துணிந்து பேசுகிறாயென்பது தெரியவில்லை, யாரிடம் நீ இவ்வளவு துணிவாகப் பேசுகிறாயென்பதையும் நீ தெரிந்து கொள்ளாமல் நிரம்பவும் எடுப்பாகத் துரக்கி யெறிந்து பேசுகிறாய். நீ எவ்வளவுதான் கூச்சலிட்டாலும், அது வெளியில் கேட்கவே கேட்காது. இவ்விடத்தில் நீ வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறாய். அப்படி இருந்தும், நீ கேவலம் பெண் பிள்ளை என்பதை மறந்து பெரிய சிப்பாயி போலப் பேச ஆரம்பித்து விட்டாய். ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து உன்