பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிக்குகைக்குட் புகுந்த பூம்பாவை 215 கெடுக்க, உங்களை போன்ற மனிதரால் ஆகுமென்று எண்ண வேண்டாம்” என்றாள். உடனே இன்ஸ்பெக்டர் முன்னிலும் பன் மடங்கு ஆத்திரமும் ஆவேசமும் அடைந்து அவளை நோக்கிக் கோப நகை நகைத்து, 'அடி முட்டாளே! போ உன்னுடைய புஸ்தகப் படிப்பையெல்லாம் நீ என்னிடம் அளக்க ஆரம்பிக்கிறாயா! அதற்கெல்லாம் இந்தச் சிங்கமா மசிகிறவன். பிரகலாதன் கம்பத்துக்குள்ளிருந்த நரசிங்கப் பெருமாளை வரவழைத்த கதையையெல்லாம் சொல்லி நீ என்னை மிரட்டப் பார்க்கிறாயா? அதெல்லாம் பழைய காலத்துக் குப்பைகள் என்பதை நான் அறிவேன். நீ சொல்லும் மேனகா, பழங்களைச் வுேம் கத்தியை எடுத்து வைத்துக் கொண்டு தன்னை குத்திக் கொள்வதாகப் பயமுறுத்தினாள். அதைக் கண்டு அந்தப் பைத்தியக்கார சாயப்பு பயந்து ஏமாறி அவளை விட்டு விட்டான். நானாக இருந்தால் எங்கே, 'குத்திக்கொள், பார்க்கலாம்' என்று சொல்லிக்கொண்டே அவளிடம் போயிருப்பேன். அவள் ஒரு நாளும் தன்னைக் குத்திக் கொண்டிருக்கவே மாட்டாள். நீ குறித்த ஷண்முக வடிவு பண்டாரத்தினிடம் அகப்பட்டுக் கொண்டபோது, அவளுக்குச் சிம்ணி எண்ணெய் விளக்கொன்று அகப்பட்டது. அந்த மாதிரி விளக்கு இங்கே உனக்கு அகப்படாது. அந்தப் பெண்ணே எண்ணெயை ஊற்றிக் கொளுத்திக் கொண்டாளோ, அல்லது, அவள் உன்னைப்போல, அவனுடைய இஷ்டத்திற்கு இணங்காமல் பிடிவாதம் செய்ததால், 'நமக்கு உபயோகப் படாதவள் எரிந்து போகட்டுமென்று அந்தப் பண்டாரமே அவள் மேல் எண்ணெயை ஊற்றிக் கொளுத்திப் பாயில் வைத்துச் சுற்றிக்கொண்டுபோய் எறித்து விட்டு வந்தானோ. நானாக இருந்தால், அப்படியேதான் செய்திருப்பேன். அடீ கோகிலா! நீ பேசும் முறுக்கடத்தைப் பார்த்தால், நீ சுலபத்தில் வழிக்கு வர மாட்டாயெனத் தோன்றுகிறது. மயிலே மயிலே என்றால் அது இறகு போடாதுதான். இருக்கட்டும். அது இறகு போடும்படி நான் இதோ செய்கிறேன்” என்று கூறிய வண்ணம் அவளைப் பலாத்காரம் செய்யும் தீர்மானத்துடன் அவளை நோக்கி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தார். அதைக் கண்ட நமது மாதுசிரோன்