பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 செளந்தர கோகிலம் மணியான கோகிலாம்பாள் திரெளபதிதேவி, 'ஆ கிருஷ்ணா, துவாரகவாசா' என்று கண்ணபிரானைக் கூவியழைத்தது போலத் தன் மனத்திற்குள்ளாகவே, "ஐயோ! கடவுளே! இது முறையோ இது உன் திருவுளத்திற்குச் சம்மதந்தானோ! சர்வேசுவரா! நீ தான் எனக்குப் புகலிடம்! உன் துணையின்றி எனக்கு வேறே யாரும் துணையில்லை. நீ விடுவதே வழி" என்று எண்ணிக் கடவுளை நினைத்து ஸ்தோத்திரம் செய்தபடி, அவ்விடத்தில் இருந்த சில பூத்தொட்டிகளுக்கு அப்பால் போய் நிற்க, இன்ஸ்பெக்டர் இரத்தங் குடித்த புலிபோல மூர்க்கமும் ஆவேசமும் காட்டி அவளைத் துரத்த ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில், அந்த அறையில் கட்டிலிற்கு அப்பால் சுவரோரமாய்ப் போடப்பட்டிருந்த மேஜையின் மீது வைக்கப் பட்டிருந்த டெலிபோன் என்ற யந்திரத்தில் மணி கணகன வென்று அடித்துக் கொண்டது. அந்த ஒசையைக் கேட்ட இன்ஸ்பெக்டர் அளவற்ற கோபாவேசம் கொண்டவராய் உடனே சடக்கென்று நின்று, 'இந்த எழவெடுத்த போலீஸ் கமிஷனருக்கு இதே வேலை; இவனுக்குச் சமயம் தெரிகிற தில்லை, சந்தர்ப்பம் தெரிகிறதில்லை; எப்போதும் கூப்பிட்டுக் கொண்டேதான் இருப்பான். அவனுடன் நான் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்க இது சமயமல்ல. நான் இங்கே இல்லை என்று சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன்’ என்று தமக்குத் தாமே எண்ணிக்கொண்டவராய் நமது கோகிலாம்பாளைத் தொட்டியண்டையிலே இருக்க விடுத்து, விரைவாக டெலிபோனண்டை ஒடினார். ஒடினவர் அந்த யந்திரத்தை எடுத்து அதன் ஒரு பாகத்தைக் காதின்மேலும் இன்னொரு பாகத்தை வாய்க்கு எதிரிலும் வைத்துக்கொண்டு அடியில் வருமாறு சம்பாஷிக்கத் தொடங்கினார். 'யார் கூப்பிடுறது? ஒகோ போலீஸ் கமிஷனர் ஆபீசிலிருந்தா பேசுகிறீர்கள்! நான் இன்ஸ்பெக்டருடைய வீட்டிலிருந்து பேசுகிறேன். இன்ஸ்பெக்டர் இப்போது வீட்டில் இல்லை. அவர் எங்கே போனாரென்பது தெரியவில்லை. நான் கோவிந்தசாமி. அவர் வந்தவுடன், கமிஷனர் அவசரமாய் அழைத்ததாக அவசியம் சொல்லுகிறேன். வேறு விசேஷமில்லையே? போகலாமல்லவா?’ என்று இன்ஸ்பெக்டர் சம்பாஷித்துவிட்டு அந்த யந்திரத்தைக் கீழே