பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 217 שי אי புலிக்குகைக்குட் புகுந்த பூம்பாவை வைத்தார். அவர் சம்பாவித்ததையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கோகிலாம்பாளினது மனத்தில் மின்னல் தோன்றுவதுபோல ஒரு யுக்தி தோன்றியது. அந்த அபாய சமயத்தில் தான் ஏதாவது தந்திரம் செய்தாலன்றி அந்த துராத்மாவிடத்திலிருந்து தான் தப்பித்துப்போவது துர்லபம் என்ற அந்த நற்குணவதி நினைத்தவளாய்த் தான் மறைந்து கொண்டிருந்த பூந்தொட்டிகளை விட்டு ஒரே பாய்ச்சலாக பாய்ந்து அறையோடு சேர்ந்தாற்போல இருந்த முன் அறைக்குள் ஒடி, இரண்டு அறைக்கும் நடுவில் இருந்த கதவைச் சாத்தித் தானிருந்த பக்கத்தில் அவசரமாகத் தாளிட்டுக் கொண்டாள். அவ்வாறு அவள் செய்வாளென்று சிறிதும் எதிர்பார்க்காத இன்ஸ்பெக்டர் ஒருவித மனக்கலக்கமும் ஆத்திரமும் அடைந்தார். ஆனாலும் கோகிலாம்பாள் எப்படியும் தமது வீட்டிற்குள் அகப்பட்டுக் கொண்டிருந்தமையால், தாம் உடனே அந்தக் கதவை நாதாங்கியை விட்டு அடியோடு கிளப்பி அப்பால் வைத்துவிட்டால், அவளை ஒரு நொடியில் பிடித்துக் குண்டுக் கட்டாய்க் கட்டித் தூக்கி வந்து கட்டிலின்மேல் போட்டு விடலாம் என்று தீர்மானித்துக் கொண்டவராய் டெலிபோனை விட்டுக் கதவண்டை ஓடிவந்து அதை அசைத்துத் துாக்க முயன்றார். அதற்குள் நமது கற்பிற்கரசி முன்பக்கத்திலிருந்த கதவண்டை ஒடி அதை இழுத்துப் பார்த்தாள். அது வெளியில் தாளிடப் பெற்றிருந்தது. ஆகையால், திறந்துகொள்ளவில்லை. தன்னை உள்ளே அனுப்பினவனது பெயர் கோவிந்தசாமி என்பதை அவள் அதற்கு முன் இன்ஸ்பெக்டர் சொல்லத் தெரிந்து கொண்டிருந்தாள். ஆகையால், அவள் தடதடவென்று விசையாகவும் ஆத்திரமாகவும் கதவைத் தட்டித் தனது குரலைத் தணிவுபடுத்திப் பேசத்தொடங்கி, 'அப்பா கோவிந்தசாமி! கோவிந்தசாமி” என்று இரண்டு தடவை கூப்பிட்டாள். வெளியில் தயாராய் இருந்த கோவிந்தசாமி, அவள் இன்ஸ்பெக்டருடைய பிடிக்கு அகப்படாமல் ஓடிவந்து தட்டுகிறாள் என்று முதலில் நினைத்தான். ஆனாலும், அவள் கூப்பிட்ட மாதிரி அவனது மனத்தில் ஒருவித சந்தேகத்தை உண்டாக்கியது. ஆகவே, அவன் உடனே கதவண்டை நெருங்கி நின்று பலகைகளின் இடுக்கில்