பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 செளந்தர கோகிலம் காசாரி ஒருவன் படுத்துக் கொண்டிருந்ததையும் உடனே கண்ட பெண்ணரசி, ஒட்டமாக வண்டியண்டை ஒடினாள். அவள் கூறிய வரலாற்றை உண்மையென்றே நம்பிய ஜெவான்கள் இருவரும் போலீஸ் கமிஷ்னர் வரப்போகிறார் என்ற அச்சங் கொண்டு தமது உத்தியோக முறைமைப்படி ஒழுங்காகவும் விறைப்பாகவும் ஜாக்கிரதையாகவும் நிற்பதிலேயே தமது கவனத்தைச் செலுத்தினர். ஆதலால், கோகிலாம்பாள் வண்டியண்டை சென்றதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அடுத்த நிமிஷம் அந்த அணங்கு பெட்டி வண்டியண்டை சென்று, "அடே யார் படுத்திருக்கிறது?’ என்று மிருதுவாகவும் விரைவாகவும் கூப்பிட, உடனே மினியன் திடுக்கிட்டு எழுந்து, ‘சாமி! நாந்தான் மினியன் சாமி! வண்டி போடட்டுமா?" என்றான். முருகேசன் நடுவழியில் போலீஸ் ஜெவானால் அழைத்துக்கொண்டு போகப்பட்டானென்ற நினைவு அவளுக்கு நன்றாக இருந்தது. ஆகையால், அங்கே படுத்திருந்தவன் அநேகமாய் போலீஸ் இன்ஸ்பெக்டருடைய காசாரியாகத்தான் இருக்க வேண்டுமென்று நினைத்ததற்கு மாறாக, அவன் தங்கள் மினியனாக இருந்ததைக் காணவே, கோகிலாம்பாள் மிகுந்த ஆச்சரியமடைந்தாள். ஆனாலும், அவன் அவ்விடத்திற்கு வந்த வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருப்பது உசிதமான காரியமல்ல என்று நினைத்து அவனை நோக்கி, "ஒகோ மினியனா! சரி; நாம் அவசரமாய்ப் போக வேண்டும். இங்கே ஒரு நிமிஷங்கூட இருக்கக்கூடாது. குதிரையைச் சீக்கிரம் பூட்டு’ என்று அவசரத்தைக் காண்பித்து மொழிந்தாள். அவளது சொற்களைக் கேட்ட மினியன் மிகுந்த ஊக்கமும் துடிதுடிப்பும் அடைந்து, ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து குதிரையின் வண்டியை ஒரே நொடியில் ஆயத்தப்படுத்தி அதன் ஒரு பக்கத்து கதவைத் திறந்து வைத்து, “ஏறுங்க சாமி” என்று பணிவாகக் கூறினான். உடனே கோகிலாம்பாள் விசையாகச் சென்று வண்டியில் ஏறி உட்கார்ந்துகொண்டு, தான் இருந்தது எவருக்கும் தெரிய கூடாதென்ற நினைவினால் இரண்டு பக்கத்து ஜன்னல் கதவுகளையும் நன்றாக இழுத்து மறைத்துக்கொண்டு, “சரி, சீக்கிரமாகப் பங்களாவுக்கு ஒட்டு” என்று மினியனைப் பார்த்துக் கூறினாள். அவனும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து தனது