பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 செளந்தர கோகிலம் பட்டிருந்த போலீஸ் ஸ்டஷனுக்குரிய போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதையும் அவள் யூகித்து நிச்சயித்துக் கொண்டாள். கண்ணபிரான் எழுதியனுப்பின கடிதத்தில், ஒரு முக்கியமான அதிகாரியின் அநுதாபமும், உதவியும் தனக்குக் கிடைத்து இருப்பதாய் அவன் எழுதி இருந்ததைப் படித்தபோதே அந்த மடந்தைக்கும் பூஞ்சோலையம்மாளுக்கும் அது போலீஸ் இன்ஸ்பெக்டராகத்தான் இருக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று. ஒரு சப் இன்ஸ்பெக்டருடைய தயவு அவனுக்குக் கிடைத்திருந்தால், அவன், "இந்த ஸ்டேஷன் அதிகாரியின் உதவி எனக்குக் கிடைத்திருக்கிற'தென்று எழுதி இருப்பான். போலீஸ் கமிஷனரோ ஸ்டேஷன்களுக்கு அதிகமாய் வருவதுமில்லை; கைதிகளோடு நெருங்கிப் பழகுவதுமில்லை. அதுவுமன்றி, அவர் வெள்ளைக்கார துரை. கருப்பு மனிதர்கள் அபாரமான செல்வாக்கும் செல்வமும் வாய்ந்தவராய் இருந்தாலன்றி மற்றவருக்கு அத்தகைய பெருத்த பதவியிலுள்ள துரைகளின் நெருங்கிய பழக்கமும் நட்பும் உதவியும் கிடைப்பது அரிது. ஆதலால், கண்ணபிரானுக்குப் பழக்கமான முக்கிய அதிகாரி போலீஸ் கமிஷனருமன்று, சப் இன்ஸ்பெக்டருமன்று அநேகமாய் அவர் பெரிய இன்ஸ்பெக்டராய்த்தான் இருக்க வேண்டுமென்று தாயும் மகளும் ஆரம்பத்திலேயே சந்தேகித்தனர். கோகிலாம் பாளின் மனத்திலிருந்த அந்தச் சந்தேகம் வேறு இரண்டு மூன்று விஷயங்களினால் நிச்சயிக்கப்பட்டது. கோவிந்தசாமி தன்னை அழைத்துச் சென்ற மாளிகை பிரம்மாண்டமானதாக இருந்ததோடு அதன் வாசலில் ஜெவான்கள் பாராக்கொடுத்து நின்றனர். பிறகு தான் உட்புறத்தில் இருந்த காலத்தில் டெலிபோன் சம்பாஷணையில் அந்த மனிதர் தாம் போலீஸ் இன்ஸ்பெக்டரது வீட்டிலிருந்து பேசுவதாகவும், ஆனால் போலீஸ் இன்ஸ் பெக்டர் அப்போது வீட்டில் இல்லையென்றும், தமது பெயர் கோவிந்தசாமியென்றும் மறுமொழி தெரிவித்தார் அல்லவா? அதிலிருந்து, அந்த வீடு போலீஸ் இன்ஸ்பெக்டருடையது என்பது சந்தேகமறத் தெரிந்தது. அந்த வீட்டிலிருந்த அவ்வளவு சிரேஷ்டமான சயன அறையை அவ்வளவு தாராளமாகவும் உரிமையோடும் கிலேசமின்றியும் உபயோகித்துக் கொண்டவர் இன்ஸ்பெக்டராகத்தான் இருக்கவேண்டும் என்ற நிச்சயம்