பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிக்குகைக்குட் புகுந்த பூம்பாவை 225 ஏற்பட்டது. அதுவுமறை, தனனை அழைத்துவந்து அறைக்குள் அனுப்பிவிட்டு வெளிக்கதவைத் தாளிட்டுக்கொண்டவனது பெயர் கோவிந்தசாமியென்று முதலில் அந்த மடந்தையிடம் கூறிய மனிதர் பிறகு டெலிபோனில் தாமே கோவிந்தசாமி என்று கூறியதிலிருந்து, தாம் இன்னாரென்பதை உள்ளபடி வெளியிட அவர் விரும்பவில்லை என்பதும், அவரே இன்ஸ்பெக்டராக இருந்தாலன்றி மற்றவர் அவ்வாறு தமது பெயரை மறைக்க வேண்டிய அவசியமில்லையென்பதும் நமது பெண்மணிக்கு நன்றாக விளங்கின. அதுவுமன்றி, அவரது கம்பீரமான தோற்றம், அமர்த்தலான நடத்தை எடுப்பான நடை நொடி பாவனைகள் முதலியவைகளும் அவர் உத்தியோக அதிகாரத் திமிர் கொண்டவர் என்பதைத் தெள்ளிதில் காட்டின. ஆதலால், மகா கூர்மையான பகுத்தறிவைப் பெற்றிருந்த கோகிலாம்பாள் தன்னிடம் துராகிருத நினைவைக் கொண்டு பலாத்காரத்தை உபயோகிக்க முயன்ற மனிதர் போலீஸ் இன்ஸ்பெக்டரே என்று உறுதியாக நிச்சயித்துக் கொண்டாள். அதுவுமன்றி, அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்மீது துர்மோகம் கொண்டிருந்தது பற்றியே, கண்ணபிரானின் மீது பொய்க் குற்றம் நிர்மாணித்து அவனைக் கைதியாக்கிக் கொண்டு போனதுமன்றி, அவனிடம் கடிதம் பெற்று அதைக் கொண்டே தன்னையும் வஞ்சித்திருக்கிறாரென்றும் அவள் நிச்சயமாக நம்பினாள். ஆனால், அந்த இன்ஸ்பெக்டரைத் தான் அதற்குமுன் பார்த்ததாகவே நினைவில்லை. ஆதலால், அவர் எப்போது தன்னைப் பார்த்து அவ்விதமான துராசை கொண்டிருப்பார் என்ற சந்தேகமும் வியப்பும் தோன்றித் தோன்றி மறைந்துகொண்டிருந்தன. அப்போது காலை சுமார் பத்துமணி சமயமாய் இருந்தது. அவள் அன்றையதினம் காலையில் எவ்வித ஆகாரமும் உண்ணாமல் புறப்பட்டுச் சென்றாள். ஆதலால், ஆகாரமின்மையால் ஏற்பட்ட தேக அயர்வும் முகவாட்டமும் ஒருபுறம் இருக்க, திடீரென்று தான் தனது கற்பை இழப்பதான பிரம்மாண்டமான அபாயத்தில் அகப்பட்டுக் கொண்டதனால் ஏற்பட்ட பெருந் திகில், குலை நடுக்கம், அதன்பிறகு அவ்விடத்திலிருந்து தான் தப்பித்துக் கொண்டு வருவதற்குத் தான் செய்த தந்திரம் பலிக்காமல் செ.கோ.lk-15