பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 செளந்தர கோகிலம் போய்விடப் போகிறதே என்ற பேரச்சம், மன அலட்டல் முதலிய பலவகைப்பட்ட பலமான உணர்ச்சிகள் ஒன்று கூடி அந்த மின்னாளை நெடுநேரமாக வதைத்து விட்டமையால் அவள் முற்றிலும் சோர்ந்து தளர்ந்து வாடித் துவண்டு பெட்டி வண்டியில் அப்படியே சாய்ந்துகொண்டாள். அவளது கண்கள் தாமாகவே மூடிக்கொள்வதும் திறந்துகொள்வதுமாய் இருந்தன. மூளையும் சிரமும் மயங்கிச் சுழன்ற வண்ணமிருந்தன. ஆகவே, அந்த அருங்குண நங்கை வண்டி எந்தத் திக்கில் சென்றது, அல்லது எந்தத் தெருவில் சென்றது என்பதையும் சிறிதும் கவனியாமல் வேதனைக் கடலில் மூழ்கியிருந்தாள். அதுவுமன்றி, மினியன் என்ற காசாரி அவர்களிடம் அந்தரங்கமான விசுவாசம் உடைய உண்மையான வேலைக்காரன் ஆதலால், அவன் தன்னிடம் கபடமாக நடந்து கொள்ளுகிறான் என்பதையாவது, அவனும் கோவிந்தபுரம் இளைய ஜெமீந்தாரும் சேர்ந்து கொண்டு தன்னைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டரது மாளிகைக்கு வந்திருப்பார்கள் என்றாவது அந்த அணங்கு கனவிலும் சந்தேகிக்க ஏதுவில்லாதிருந்தமையால், ஒரு வஞ்சக வலையிலிருந்து தப்பி வந்த தன்னை மறுபடி வீழ்த்த இன்னொரு வஞ்சக வலை விரிக்கப்பட்டிருக்கும் என்பதை அவள் சிறிதும் எண்ணாமல், தனது மனம் முழுவதையும் வேறிடத்தில் செல்லவிடுத்து மெய்ம்மறந்து போயிருந்தாள். ஆயினும், தான் தனது பங்களாவை விரைவில் அடையவேண்டும் என்ற ஆவலும், தனக்கு நேரிட்ட பேராபத்தைத் தனது தாயிடம் கூறி, மறுபடி ஏதேனும் தக்க ஏற்பாடு செய்து, கண்ணபிரானை விடுவிக்க முயற்சிக்க வேண்டுமென்ற ஆவலும் இன்னொரு புறத்தில் அவளை வருத்திக் கொண்டே இருந்தமையால் வழி நீண்டுகொண்டே போவது போலத் தோன்றி அவள் தனது பொறுமையை இழந்து தவிக்கும்படிச் செய்தது. அவ்வாறு அந்த மங்கையர்க்கரசி குழம்பிய அறிவும், கலங்கிய மனதும், தளர்ந்த மேனியும், தவித்த அங்கங்களுமாய் வண்டிக்குள் வீற்றிருக்க, மினியன் கோவிந்தபுரம் இளைய ஜெமீந்தாரது விருப்பத்தின்படி வண்டியை விசையாகத் தென் திசையில் விடுத்துக்கொண்டே ஹைக்கோர்ட்டுப் பக்கமாகச் சென்று கோட்டை மைதானத்தை அடைந்து, அதைத் தாண்டி