பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிக்குகைக்குட் புகுந்த பூம்பாவை 227 மேலும் தெற்கு திக்கில் போகத் தொடங்கினான். அவன் துணிந்து அவ்வாறு செய்தான். ஆனாலும், கோகிலாம்பாள் அது இன்ன இடம் என்பதைத் தெரிந்துகொண்டு வண்டியை நிறுத்தும்படித் திடீரென்று உத்தரவு கொடுத்துவிட்டால், கோவிந்தபுரம் இளைய ஜெமீந்தாரின் கோரிக்கையின்படி தான் நடந்துகொள்ள இயலாமல் போய் விடுவதோடு, அவ்வளவு தாரம் தெற்கில் வண்டியை ஒட்டி வந்ததற்குக் காரணம் தான் சொல்ல நேருமே என்ற அச்சமும் அபாரமாக எழுந்து அவனை நடுக்குவித்தது. பாதைகள் பழுது பார்க்கப்படுவதாகத் தான் கூறிய சமாதானம் உண்மையாக இருந்தாலும், இடை இடையில் மேற்கு நோக்கி குறுக்கே சென்ற பத்துப் பதினைந்து பாதைகளை யும் கடந்து, தான் நேராகத் தெற்குத் திக்கில் ஒன்றரை மைல் தூரம் வந்து விட்டதற்கு தான் எவ்விதமான சமாதானமும் கூறினாலும், அது பொருத்தமாய் இராதே என்ற பெருத்த கவலையும், அவள் கவனித்துக் கேள்வி கேட்டுவிட்டால் தான் தப்புவது துர்லபமென்ற அச்சமும் மினியனது மனத்தில் தோன்றி அவனை அளவற்ற சஞ்சலத்தில் ஆழ்த்திக்கொண்டே இருந்தன. கோகிலாம்பாள் கேட்டுவிட்டால், தான் எவ்விதமான சமாதானம் கூறலாம் என்று அவன் ஒவ்வொன்றாக யோசித்து யோசித்துத் தனக்குத்தானே ஆக்ஷேபணை சமாதானங்கள் செய்து கொள்கிறான். எந்தச் சமாதானமும் அவனுக்குத் திருப்திகரமாகத் தோன்றவில்லை. அவன் கோட்டையைக் கடந்து அதற்கப் புறத்திலிருந்த கடற்கரைச் சாலையின் வழியாகச் செல்ல ஆரம்பிக்க, அவனது உடம்பு தானாகவே நடுங்கத் தொடங்கியது. கோவிந்தபுரம் இளைய ஜெமீந்தார் தனது எஜமாட்டிக்கு எவ்விதமான கெடுதலோ, அல்லது, அவமானமோ செய்வாரோ என்ற பீதி அவனது மனத்தைக் கலக்க ஆரம்பித்தது. அவனது அடி வயிற்றில் ஒருவித வேதனை தோன்றி, அவனை நிலைதடுமாறச் செய்தது. சிறிது தூரத்திற்கு அப்பாலிருந்த தோப்பிற்குள் தான் வண்டியை நிறுத்தினால், அப்போது எப்படியும் கோகிலாம்பாள் வெளிப்பக்கத்தை நோக்கி, அது இன்ன இடம் என்பதைக் கவனித்து உடனே உண்மையைக் கண்டுகொள்வாள், அல்லது, அவ்விடத்தில் கோவிந்தபுரம் இளைய ஜெமீந்தார் வந்து அவளுக்கு ஏதேனும் கெடுதல் செய்ய