பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிக்குகைக்குட் புகுந்த பூம்பாவை 231 கவலைப்படாமல் ஒரு பக்கமாய்ப்போய் உட்கார்ந்துகொண்டிரு” என்று கூறியபின் அவ்விடத்தை விட்டு வெளியில் வந்து சரிவின் வழியாக மேலே ஏறி மினியனது திருஷ்டியில் படாமல் மறைந்து போனான். அவ்வாறு தனியாய் விடப்பட்ட மினியன் சுமார் பத்து திமிஷ காலம்வரையில் அவ்விடத்தில் தங்கி தனது தேக பாதையை நிவர்த்தி செய்து, இளைய ஜெமீந்தாரது வருகையை ஆவலோடு எதிர்பார்த்தவனாய் நின்றுகொண்டிருந்தான். வண்டிகள் தடதடவென்று போவதும் வருவதுமாயிருந்தன. நிமிஷம் கழியக் கழிய அவனது மனவேதனை அதிகரித்து மலையாய்ப் பெருகியது. தன் வண்டி நடு ரஸ்தாவில் நிறுத்தப் பட்டிருந்தமையால், கோகிலாம்பாள் நான்கு பக்கங்களையும் பார்த்து, அது இன்ன இடம் என்பதை எப்படியும் அந்நேரம் கண்டுகொண்டிருப்பாள் என்ற அச்சமே பெரிதாக அவனை வதைக்கத் தொடங்கியது. கோகிலாம்பாளும், செளந்தர வல்லியம்மாளும் அதற்குமுன் பல தடவைகளில் கடற்காற்று வாங்கும் பொருட்டு அந்த இடத்திற்கு வந்திருப்பதால், அதன் அடையாளம் கோகிலாம்பாளுக்கு நன்றாகத் தெரிந்துபோய் விடுமாதலால், அந்தத் தடவை தான் தப்ப முடியாதென்றும், அவர்களிடம் இனி தனக்கு வேலை நிலைக்காதென்றும் மினியன் நினைத்துப் பலவாறு எண்ணமிட்டவனாய் இருந்தான். அவன் அவ்விடத்தில் சந்தித்த மனிதன் போன பிறகு, சுமார் அரைநாழிகை சாவகாசம் கழிந்தது. அந்நேரம் அநேகமாய் இளைய ஜமீந்தார் வந்து கோகிலாம்பாளோடு பேசி முடித் திருப்பாரென்றும், அவர் தம்மைக் கூப்பிடுவார் என்றும் மினியன் நினைத்து ஆவலே வடிவாயும், வேதனையே நிறைவாயும் தவித்திருக்க, அப்பொழுது பாலத்தின்மேல் நின்றபடி சுந்தர மூர்த்தி முதலியார், "மினியா அடே மினியா" என்று மிகுந்த கவலையோடு அவனைக் கூப்பிட்ட குரல் உண்டாயிற்று. அடுத்த நிமிஷம் அவர் சரிவண்டை வந்து தமது முகத்தைக் கணவாய்ப் பக்கம் திருப்பி உள்பக்கம் பார்த்தபடி இன்னொரு முறை, "மினியா! மினியா!' என்று கூப்பிட்டார். இளைய ஜெமீந்தார்தான் தன்னை அழைக்கிறார் என்று நிச்சயித்துக்கொண்ட மினியன் கோகிலாம்பாளுக்கு எதிரில்,