பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 செளந்தர கோகிலம் கூறினார். அவரது சொற்களைக் கேட்ட மினியன் எவ்வித மறு மொழியும் கூறமாட்டாதவனாய்ச் சித்தப்பிரமை கொண்டவன் போலத் தோன்றி மருள மருள விழித்துத் தனது கைகளைப் பிசைந்துகொண்டு தத்ரூபம் ஊமைபோலவே நின்றான். அதற்குள் சுந்தரமூர்த்தி முதலியாரது வேலைக்காரன் அங்குமிங்கும் ஒடி, தோப்பிற்குள்ளும், தாழைப் புதருக்கும் அப்பாலும் சென்று தேடிவிட்டு ஏங்கிய முகமும், பதறிய அங்கங்களுமாய்த் திரும்பி வந்து தமது எஜமானரைப் பார்த்து, "சாe! வண்டி வடக்கிலும் போகவில்லை; பக்கங்களிலும் இல்லை. அது தெற்கில்தான் போயிருக்கவேண்டும். நாம் தெற்கே போய்ப் பார்க்கலாம்" என்றான். - உடனே சுந்தரமூர்த்தி முதலியாரும் அவரது வேலைக் காரனும், மினியனும் அங்கிருந்த அவர்களது பீட்டன் வண்டியில் ஏறிக்கொண்டு அதைத் தெற்கு திசையில் விரைவாக ஒட்டிக்கொண்டு செல்லலாயினர். வண்டி சிறிது தூரம் போனபொழுது சுந்தரமூர்த்தி முதலியார் மினியனை நோக்கி, 'இந்த ரஸ்தாவிலிருந்து திருவல்லிக்கேணிக்குப் போகும் பாதைகள் மேற்கு திக்கில் எத்தனையோ பிரிந்து போகின்றனவே! அவளுடைய வண்டி இந்தப் பாதைகளில் எதன் வழியாகவாவது திருவல்லிக்கேணிப் பக்கம் போயிருக்குமோ என்னவோ. நாம் கண்ணை மூடிக்கொண்டு நேராகத் தெற்கே போய்க் கொண்டிருப்பது வீண்வேலையாக முடியுமோ என்னவோ தெரியவில்லையே” என்றார். உடனே அவரது வேலைக்காரன், 'நாம் இப்படியே திருவல்லிக்கேணிக்குப் போகிறதாக வைத்துக் கொள்வோம். பெண் நேராகத் தெற்கே போயிருந்தால், நாம் இங்கே போவதும் வீணாய்த்தானே முடியும்” என்றான். அதைக் கேட்ட சுந்தரமூர்த்தி முதலியார் சிறிதுநேரம் யோசனை செய்து, "ஆம், நீ சொல்வதும் சரியான சங்கதிதான்! பல ரஸ்தாக்கள் எதிரில் குறுக்கிடும்போது, எவ்விதமான தகவலும் இல்லாமல் நாம் தேடினால் இப்படிப்பட்ட திண்டாட்டந்தான் ஏற்படும். ஆனால், எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. பெண்ணை அழைத்துக் கொண்டு போன மனிதர்