பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிக்குகைக்குட் புகுந்த பூம்பாவை 235 அவளுக்குக் கெடுதல் செய்ய நினைப்பவராய் இருந்தால், அவர் வண்டியை ஊருக்குள் கொண்டுபோக எண்ணமாட்டார். அவர் பெண்ணுக்கு வேண்டிய மனிதராயிருந்து, அதற்கு உதவி செய்ய எண்ணினால் மாத்திரம், அவர் வண்டியைத் திருவல்லிக்கேணி வழியாகக் கொண்டு போயிருப்பார்.அவரைத் தொடர்ந்து நாம் இருவல்லிக்கேணிக்குப் போகவேண்டிய அவசியமே இல்லை. பெண்ணுக்குக் கெடுதல் செய்ய நினைத்திருந்தால், அவர் வண்டியை நேரில் தெற்கேதான் கொண்டுபோயிருப்பார். ஆகையால், நாம் நேராகத் தெற்குத் திக்கில் பார்த்துக்கொண்டே மயிலாப்பூர் வரையில் போவோம்; அதற்கு அப்பாலும் கொஞ்ச தூரம் போய்ப் பார்த்து நிச்சயித்துக் கொள்வோம். வண்டி அங்கே காணப்படாவிடில், பெண் திருவல்லிக்கேணி வழியாய்த் தான் போயிருக்க வேண்டு மென்றும், அது பத்திரமாய் வீட்டுக்குப் போய்ச் சேரும் என்றும் நாம் யூகித்துக் கொள்வோம்” என்று கூறிய வண்ணம் தமது பீட்டன் வண்டியை விரைவாகத் தெற்குத் திக்கில் ஒட்டினார்.